Biggboss Tamil 5 : இங்கே சில குரூப்ஸ் இருக்கு.. அவங்க என்னைப் புறக்கணிக்கிறாங்க.. ஆதங்கப்படும் பாவனி..!
பிக்பாஸ் சீசன்5-ன் இன்றைய நாளின் 3ம் புரோமோ வெளியாகியிருக்கிறது. இசைவாணியுடன் பேசிக்கொண்டிருக்கிறார் பாவனி
பிக்பாஸ் சீசன்5-ன் இன்றைய நாளின் 3ம் புரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இசைவாணியுடன் பெட்டில் அமர்ந்துக் கொண்டே பேசிக்கொண்டிருக்கிறார் பாவனி. இங்கே சில குரூப்ஸ் இருக்கு.. அவங்க பேசிக்கிட்டு இருக்கறப்ப நான் போய் உக்காந்தா கூட என்னை புறக்கணிச்சுட்டு வேற டாபிக்ஸ் பேசுறாங்க. அது எனக்கு நல்லா தெரியுது என்கிறார் பாவனி.. அவருக்கு தலையசைத்து கேட்கிறார் இசைவாணி. பாவனியின் நிலைமை தனக்கு நன்றாகப் புரிகிறது என்றும் தெரிவிக்கிறார்.
உடனே குறுக்கில் புகும் ஐக்கி, நீ ஏன் தனியா ஃபீல் பண்றே..? எல்லாரும் உன்ன கூப்பிட்டுக்கிட்டுதன இருக்காங்க என்கிறார்.
அதை மறுக்கும் பாவனி இங்கு தனித்தனி குழுக்கள் உள்ளதாக தெரிவிக்கிறார். இசைவாணியும் ஐக்கிபெரியைப் பார்த்து பிக்பாஸ் வீட்டில் தனித்தனி குரூப்கள் இருப்பது நீ பேசுவதிலிருந்தே புரியுது பார் என்கிறார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் முதல்வார எலிமினேஷன் வாக்களிப்பு இன்று முதல் தொடங்குகிறது. வாரத்தின் முதல்நாளான இன்றே அதற்கான வாக்கெடுப்பு நடப்பதால், வீடு சூடுபிடிக்கிறது. ஏற்கனவே முதல் ப்ரொமோ வெளியான நிலையில், இரண்டாவது ப்ரொமோ சற்று முன் வெளியானது. அதில் எலிமினேஷனில் பங்கேற்கும் போட்டியாளர்களின் முழு பெயரை பிக்பாஸ் அறிவித்தார். அதை போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கேட்டு அதிர்ச்சியாவதும், நதியா ஒரு படி மேலே போய்... ‛வெச்சு செஞ்சிட்டீங்களே...’ என்று ஆதங்கப்படுவதும், ‛ப்ரியங்கா தனக்கே உரிய பாணியில்... கொளுத்திப் போடு கொளுத்தி போடு....’ என அலற, இன்று உண்மையிலேயே கொளுந்து விட்டு எரியப்போகிறது பிக்பாஸ் வீடு...
#Day8 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/r1sMjlFMOQ
— Vijay Television (@vijaytelevision) October 11, 2021
இன்று காலை முதல் புரோமோ வெளியானது. அதில், வழக்கம் போல பிக்பாஸ் எலிமினேஷன் அறிவிப்பை வெளியிடுகிறார். அதில் , ‛வீட்டில் இருக்கும் அனைவரும் நல்லவங்க... என்று கூறி நீங்க நல்லவங்க வேஷம் போடாம இருந்தீங்கன்னா நல்லா இருக்கும்....’ என்று எடுத்த எடுப்பிலேயே குண்டை போடும் பிக்பாஸ், கன்பெக்ஷன் அறைக்கு போட்டியாளர்களை அழைத்து, நாமினேஷன் செய்ய அறிவுறுத்துகிறார். அதன் படி ஒவ்வொருவராக நாமினேஷனை தொடங்குகின்றனர்.
இசைவாணிக்கு எதிராக அக்ஷரா ஓட்டளித்தார். தன்னை அவர் டார்க்கெட் செய்வதாக அதற்கு காரணம் கூறுகிறார். பின்னர் அபிஷேக் வந்து அக்ஷராவுக்கு ஓட்டளிக்கிறார். அவரால் கம்பர்டபுளாக இருக்க முடியவில்லை என்று அபிஷேக் அதற்கு காரணம் கூறுகிறார். பின்னர் இமான் அண்ணாச்சி வந்து அபினவ்விற்கு ஓட்டளித்தார். பின்னர் அபினவ் வந்து இசைவாணிக்கு எதிராக ஓட்டளித்தார். எல்லோரிடமும் அவரால் ஜெல் ஆக முடியவில்லை என இசைவாணி மீது அவர் குற்றம்சாட்டினார். குறிப்பிட்ட சிலர் மட்டுமே வாக்களித்ததை காட்டும் இந்த ப்ரொமோவின் அடிப்படையில் இசைவாணி அதிக ஓட்டுகளை பெறுவார் என்று தெரிகிறது. அவரை தொடர்ந்து அக்ஷரா மற்றும் அபினவ் ஆகியோரும் ஓட்டுகளை பெற்று இந்த வார எலிமிேஷனலில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.
#Day8 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/rl5g6XO4Y7
— Vijay Television (@vijaytelevision) October 11, 2021