ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிய தாமரைச் செல்வி... கொண்டாடும் இணையவாசிகள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட்டுகளாக முதல் நபராய் அமீர் மற்றும் இரண்டாவது நபராய் நிரூப் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இந்த சூழலில் தாமரைச்செல்வி எவிக்ஷன் ஆகியிருக்கிறார்
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி க்ளைமேக்ஸை எட்டியுள்ளது. நிகழ்ச்சியின் ஃபினாலே வாரம் தொடங்குகிறது. வரும் 16ஆம் தேதி பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே கோலாகலமாக நடைபெறவுள்ளது
இதில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று இதுவரை கணிக்க முடியாத நிலையில் உள்ளது. இதுவரை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள ராஜுவே வின்னராக ஆக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட்டுகளாக முதல் நபராய் அமீர் மற்றும் இரண்டாவது நபராய் நிரூப் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இந்த சூழலில் தாமரைச்செல்வி எவிக்ஷன் ஆகியிருக்கிறார்.
நாடக கலைஞரான தாமரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் 95 நாட்கள்வரை விளையாடியவர். ஆரம்பத்தில் விளையாட்டு புரியாமல் திணறியவர் போகப்போக தன்னிச்சையாக விளையாட ஆரம்பித்துவிட்டார்.
Madan Gowri | முதல்ல நண்பர்கள்.. அப்புறம் காதல்.. ப்ரேக்-அப்.. கல்யாண சேதி சொன்ன மதன் கெளரி...
கிராமத்தில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இவருக்கு ஆங்கில மொழி பேச்சு இடையூறாக இருந்து வந்த நிலையில், சக போட்டியாளர்கள் இதனை எளிதாக புரிய வைத்தனர்.மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாமரை பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், சிபி வெளியேறினார்.
ஆனால் அவர் எவிக்ட் ஆகி வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸை விட்டு வெளியேறிய தாமரை ஆட்டோ ஒன்றில் தனது வீட்டிற்கு செல்வது, அங்கு முதலில் விளக்கேற்றி கும்பிடுவது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைப்பு!
Trisha Covid Negative: ‛இது என்னோட மோசமான நாள்...’ தொற்றில் மீண்ட திரிஷா நெகிழ்ச்சி ட்வீட்!