மேலும் அறிய

Cooku With Comali 3 | 'புகழ்' வெளிச்சம் வீசுகிறதா இல்லையா? வெளியானது குக் வித் கோமாளி போட்டியாளர்கள் பட்டியல்..

செஃப் தாமு தன் இன்ஸ்டாவில் புகழ் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்து இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் புகழ்பெற்றது ’குக் வித் கோமாளி என்பதும் முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசன் மிகப்பெரிய அளவில் பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ’குக்’கள் மற்றும் கோமாளிகள் தற்போது திரையுலகிலும் வாய்ப்புகள் பெற்று பிஸியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்போடும் காத்திருந்த நிலையில் அதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்பதால் இந்த நிகழ்ச்சி முடிந்து அடுத்த வாரத்தில் இருந்து குக் வித் கோமாளி 3’ தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Cooku With Comali 3 | 'புகழ்' வெளிச்சம் வீசுகிறதா இல்லையா? வெளியானது குக் வித் கோமாளி போட்டியாளர்கள் பட்டியல்..

சமையலோடு நகைச்சுவையையும் கலந்து மக்களுக்கு விருந்தளிக்கும் இந்த குக் வித் கோமாளி 3-ம் சீஸனின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி மக்களின் ஆர்வத்தைத் தூண்டியது. மேலும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த சீசனின் கோமாளிகளையும் போட்டியாளர்களையும் கணித்து வருகின்றனர். அந்த  வரிசையில், மணிமேகலை, பாடகி ஷிவாங்கி, பாலா மற்றும் சுனிதா ஆகியோர் நிச்சயம் பங்கேற்கவுள்ளனர் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் புகழ் இல்லாதது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. முதல் சீசனில் ரம்யா பாண்டியனோடும், இரண்டாம் சீசனில் பவித்ராவுடனும் இவர் சேர்ந்து செய்த காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது. ஷிவாங்கி மற்றும் புகழுக்காகவே இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் அதிகம். ஆனால், இந்த சீசனில் புகழ் இல்லாதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. சினிமா ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் புகழ் இம்முறை குக் வித் கோமாளியில் பங்குபெறமாட்டார் என்று தகவல்கள் பரவின. 

குக் வித் கோமாளி ரசிகர்கள் விஜய் டிவி பிரபலங்களின் இன்ஸ்டா பதிவுகளில் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் செஃப் தாமு தன் இன்ஸ்டாவில் புகழ் ரசிகர்களுக்கு பதில் அளித்து இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்கள் மற்றும் நடுவர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர்களிடம் புகழ் வருவாரா என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகளை நிரப்பிய நிலையில் இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிலளித்த செஃப் தாமு, “ஆம் 100 சதவீதம்” என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இதுவரை உறுதி செய்யப்பட்ட ஆறு போட்டியாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை ஊர்வசி, வி.ஜே.அர்ச்சனா மற்றும் ‘சர்வைவர்’ புகழ் விஜயலட்சுமி ஆகியோர் வரும் சீசனில் போட்டியாளர்களாகப் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், ‘பாரதி கண்ணம்மா’ புகழ் ரோஷினி ஹரிப்ரியன், ‘செந்தூர பூவே’ ஸ்ரீ நித்தி, நடிகர் நந்தன் லோகநாதன் போன்ற பிரபலங்கள் சிலர் இந்த சீசனில் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், மாநிலம் முழுவதும் புதிய கோமாளிகளுக்கான ஆடிஷன் நடைபெற்றது. புதிய திறமைகளை விரைவில் சின்னத்திரையில் காண ரசிகர்கள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் உற்சாகமாக உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget