Anitha Against Simbu : "சிம்புவுக்கு இதெல்லாம் புரியாது", பகைத்துக்கொள்ளும் அனிதா… கொந்தளிக்கும் சிம்பு ரசிகர்கள்…
"நீ பேசுனது ரொம்ப ஆழமான விஷயம். இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது. அவர் அதுபற்றி யோசிக்கவும் மாட்டார். ஏன்னா அவர் பிக்பாஸுக்கு புதுசு. கமல் சாருக்கு இதெல்லாம் ஓரளவுக்கு புரிஞ்சிருக்கும்."
![Anitha Against Simbu : Simbu does not understand all this hateful Anitha sampath Turbulent Simbu fans Anitha Against Simbu :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/17/d33849987f9dd1472dce50f619dab6bb_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக் பாஸ் சீசன் 5 முடிந்த உடனே, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியானது. பிக்பாஸ் முந்தைய சீசனில் இருந்த போட்டியாளர்களின் சர்ச்சைக்கு வித்திட்ட முக்கிய போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் மொத வைத்துள்ளனர். வனிதா, ஜூலி, தாமரை என கடுமையான 14 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து முதலில் களமிறங்கினர். பின்னர் இதுவரை கலந்து கொள்ளாத சதீஷும் வைல்டு கார்டு போட்டியாளராக உள்நுழைந்தார், அவருடன் சுரேஷ் சக்கரவர்த்தியும் இணைந்துள்ளார்.
இதனிடையே பிக் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், விக்ரம் படப்பிடிப்பு இருப்பதாக கூறி விலகினார். தற்போது சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கமலைப் போல சிம்பு சிறப்பாக தொகுத்து வழங்கி வருவதாக பலர் அவரை பாராட்டி வருகிறார். முதல் வாரத்தில் அன்பாக பேசிய சிம்பு, அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்டதால் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Ivanga romba depth ana point sonnangalam athu STR ku puriyatham! 🤭🤦🏻♀️#BiggBossTamil #BBUltimate #BiggBossUltimate pic.twitter.com/YuIZPt6Sp2
— Stone Heart (@Stonecoldhrt) March 13, 2022
இதற்கிடையே வனிதா காரணம் கூறாமல் வெளியேறினார், தற்போது இந்நிகழ்ச்சி 7 வாரங்களை நிறைவு செய்துள்ள நிலையில், நிகழ்ச்சியில் இருந்து இதுவரை, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, ஆகியோர் தொடக்கத்திலேயே வெளியேறிவிட்டனர். அடுத்து நிகழ்ச்சியில் முக்கிய புள்ளியாக அனைவருடனும் மோதல்போக்கை கடைபிடித்த வனிதா சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், சுரேஷ் சக்ரவர்த்தி கேபிஒய் சதீஷ் ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். இந்நிகழ்ச்சியை தெகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சிம்புக்காகவே பல ரசிகர்கள் வார கடைசியில் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சிம்பு குறித்து அனிதா பிக் பாஸ் வீட்டில் பேசி சிம்பு ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
Ohh #Anithasampath I think u never follow Our @SilambarasanTR_ Anna as well. He watched all season and he will call the people from bigg boss and gifted them😌 i think ungaluku tha Puriyala nu https://t.co/aW633KVDpq
— Sathish Simbu (@iamsathishsimbu) March 14, 2022
இந்த நிலையில், சிம்பு குறித்து அனிதா பிக் பாஸ் வீட்டில் பேசி சிம்பு ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. சுருதியிடம் பேசிக்கொண்டிருந்த அனிதா, "நீ பேசுனது ரொம்ப ஆழமான விஷயம். இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது. அவர் அதுபற்றி யோசிக்கவும் மாட்டார். ஏன்னா அவர் பிக்பாஸுக்கு புதுசு. கமல் சாருக்கு இதெல்லாம் ஓரளவுக்கு புரிஞ்சிருக்கும். ஏன்னா கமல் சார் இதெல்லாம் 5 சீசனனா பார்த்துக்கிட்டே இருக்கார்," என தெரிவித்துள்ளார். கமல் சாருக்கே ஓரளவுக்குதான் புரிந்திருக்கும் என்று கூறி மேதாவித்தனத்தை காட்டுகிறார் என்று ட்ரோல் செய்கின்றனர் ரசிகர்கள்.
இந்த வீடியோவை பார்த்து கடுப்பான சிம்பு ரசிகர்கள் வரும் வாரத்தில் அனிதாவை வெளியேற்ற வேண்டும் என்று அனிதாவுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கமலை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருப்பாரா இந்த அனிதா, சிம்புவை என்ன நினைத்தார், அவரும் சிறு வயதிலிருந்து சினிமாவில் இயங்கி வருபவர் என்று போது சமூகமும் அனிதா மீது எதிர்ப்பை உமிழ்ந்து வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)