Biggboss Tamil 5 | எல்லாமே ரூல் புக்கா.. எச்சில் துப்பக்கூடாதுன்னு எழுதலன்னா துப்பலாமா.. பாவனிக்கும், சுருதிக்கும் வாத்தி ரெய்டு
Biggboss Tamil 5 | தன்னைக் கேட்காமலேயே கிச்சன் பொருட்கள் பயன்படுத்தப்படுவது குறித்து இசை கோபித்ததும், நிரூப் சமாதானப்படுத்தியதும் அழகு
Biggboss Tamil 5 | Episode 28 - 30 October
விஜய் டிவி பிக்பாஸ் தமிழ் 5 எபிசோட் 28 பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இன்று வீக்கெண்ட் எபிசோடுக்காக காத்திருந்த எல்லோருக்கும் ஒரு வழி பிறந்தும்விட்டது.
தன்னைக் கேட்காமலேயே கிச்சன் பொருட்கள் பயன்படுத்தப்படுவது குறித்து இசை கோபித்ததும், நிரூப் சமாதானப்படுத்தியதும் அழகு. ப்ரியங்காவின் செயல்பாடுகள் வெகுவாக மாறியிருப்பதாக பாராட்டினார் கமல். அப்புறம் வந்தது தாமரை - சுருதி - பாவனி பஞ்சாயத்து. அவர்கள் தப்பு செய்யவில்லை. துரோகம் செய்துவிட்டார்கள் எனப் பேசினார் தாமரை. வழக்கம்போல பாசம், அன்பு வெச்சேன் என அதே பொங்கலை வைக்கிறார். இங்கு ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது அன்பு பாசம் என பொரியல் போடுவது அவராகவே இருக்கிறார். பின்பு சுருதி இப்போதும் தான் செய்தது சரியே என்னும் ரேஞ்சிலேயே பேசிக்கொண்டிருந்தார். எல்லாம் ரூல்ல இருக்கு என்றார் (கஷ்டம்). பாவனி வழக்கம்போல தான் செய்தது சரியே. நான் அப்பாவி. வேண்டுமென்றே செய்யவில்லை என சூடம் அடிக்காத குறையாக பேசினார்.
View this post on Instagram
View this post on Instagram
அன்பும், பாசமும் வேண்டாம், பண்பாக நடந்துகொள்ளுங்கள் என சொல்லிவிட்டு, சண்டையை சமாதானம் செய்துவிட்டார் கமல். திருடனுக்கு தேள் கொட்டியதைப்போல் இருந்த பாவனியும், சுருதியும் வருணிடம் போய் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். இதை பத்தி பேசுறதை நிறுத்துனாவே இது முடிஞ்சிடும் என பாய்ண்ட்டாக பேசினார் ப்ரியங்கா. (செம ஃபார்மில் இருக்கிறார்)