மேலும் அறிய
Advertisement
Bigg Boss 7 Tamil: ”நான் தான் வெளியேற போகிறேன்” சோகத்தில் பிராவோ! பிக்பாஸ் வீட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி!
பிக்பாஸ் வீட்டில் இருந்து வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்த பிராவோ மற்றும் ஆரம்பத்தில் இருந்தே போட்டியில் இருந்து வரும் அக்ஷயா வெளியேற்றப்படுவார்கள் என்ற தகவலும் கசிந்துள்ளது.
Bigg Boss 7 Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதேநேர பூகம்பம் டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தோற்றால் 3 போட்டியாளர் வெளியேற்றப்படுவார்கள், அவர்களுக்கு பதிலாக 3 வைல்டு கார்டு எண்ட்ரி இருக்கும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
வெளியேறப் போவது யார்?
இந்த நிலையில், வாரத்தின் கடைசி எபிசோடில் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன், பஞ்சாயத்துகளை தீர்த்து வைப்பதுடன், யார் போட்டியில் பங்கேற்பது, வெளியேறுவது என்றும் அறிவிப்பார். அந்த வகையில் இன்றைக்கான எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், பிக்பாஸ் வீட்டில் பூகம்பம் பெரிதாக தாக்கியுள்ளது. இந்த முறை பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியே செல்ல உள்ளனர் என்ற கேள்வியை கமல்ஹாசன் கேட்கிறார்.
அதற்கு, பூர்ணிமா மாயா போவார்கள் என்றும், பிராவோ நான் தான் செல்வேன் என்றும் கூறுகிறார். அதேநேரம் அக்ஷயா நான் வெளியே போவேன் என்று சொல்ல முடியாது இல்ல என கேட்கிறார். இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் எவிக்ட் ஆக உள்ளனர் என்ற எதிர்பார்ப்புடன் இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள எபிசோடை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
யார் அவுட்?
முன்னதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்த பிராவோ மற்றும் ஆரம்பத்தில் இருந்தே போட்டியில் இருந்து வரும் அக்ஷயா வெளியேற்றப்படுவார்கள் என்ற தகவலும் கசிந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் அடுத்த எவிக்ஷனிற்கு மாயா, அக்சயா தவிர, மணி, அர்ச்சனா, ரவீனா, விசித்ரா, பூர்ணிமா, பிராவோ ஆகியோர் நேரடி நாமினேஷனில் இருந்தனர். இவர்களில் குறைந்த வாக்குகளை பிராவோ மற்றும் அக்ஷயா பெற்றதாக கூறப்படுகிறது. இதனால், பிராவோ, அக்ஷயா இந்தவார எலிமினேஷனாக இருக்கும் என்ற தகவல் வைரலாக்கப்பட்டு வருகிறது.
#Day55 #Promo2 of #BiggBossTamil
— Bigg Boss Tamil 7 & Entertainment (@BiggBossTamila7) November 25, 2023
Bigg Boss Tamil Season 7. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/6tteqWWXz6
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: ”இந்த வாரம் டபுள் எவிக்ஷன்” .. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் 2 பேர் இவர்கள் தான்..!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion