Bigg Boss Tamil 9: அப்படிப்போடு.. பிக்பாஸ் 9 தமிழ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என தெரிய வந்துள்ளது. விக்கல்ஸ் விக்ரம், சபரி நாதன், அரோரா, திவ்யா ஆகிய இறுதிப்போட்டிக்கான பட்டியலில் இருந்தனர்.

பிக்பாஸ் தமிழின் சீசன் 9 நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி இன்று ஒளிபரப்பாகிறது. இதனிடையே இந்த போட்டியில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடத்தில் தனியிடத்தைப் பிடித்துள்ளது. முதலில் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன்பின்னர் தற்போது இரண்டு சீசன்களாக நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக உள்ளார். இந்த நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 9வது சீசன் கடந்த 2025, அக்டோபர் 5ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நேரடி போட்டியாளர்களாக 20 பேரும், வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் 4 பேரும் உள்ளே வந்தனர்.
அதன்படி சபரி நாதன், அரோரா சின்க்ளர், விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், எஃப் ஜே, கனி திரு, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், பிரவீன், கம்ரூதின், இயக்குநர் பிரவீன் காந்தி, சுபிக்ஷா, ஆதிரை, வியானா, ரம்யா ஜோ, கெமி, கலையரசன், துஷார், அப்ஷரா, நந்தினி, விஜே பார்வதி ஆகிய 20 பேர் நேரடி போட்டியாளர்களாக களம் கண்டனர்.
தொடர்ந்து திவ்யா கணேசன், பிரஜீன், அவர் மனைவி சாண்ட்ரா, அமித் பார்கவ் ஆகியோர் வைல்ட் கார்ட் எண்ட்ரீ மூலம் உள்ளே நுழைந்தனர்.
சர்ச்சைகளை சந்தித்த பிக்பாஸ் நிகழ்ச்சி
மற்ற சீசன்களை விட இந்த சீசன் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தது. கெட்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியது, மைக்கில் கை வைத்து மறைத்து ரகசியம் பேசியது, இரட்டை அர்த்த வசனங்களை அள்ளி வீசியது, காதல் என வேறு மாதிரி சென்றது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்வையாளராக இருக்கும் நிலையில் இப்படி செய்யலாமா என்ற கேள்வி எழுந்தது.
விஜய் சேதுபதி ஒவ்வொரு வார நிகழ்ச்சியிலும் இதனை கடுமையாக கண்டித்தார். ஒரு கட்டத்தில் இது தனி நபர் தாக்குதலாக மாறியது. டிக்கெட் டூ ஃபினாலி போட்டியில் கார் டாஸ்கில் சக போட்டியாளரான சாண்ட்ராவை கம்ரூதினும், விஜே பார்வதியும் சேர்த்து மிதித்து வெளியே தள்ளியதால் அவர்கள் இருவரும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.
டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என தெரிய வந்துள்ளது. விக்கல்ஸ் விக்ரம், சபரி நாதன், அரோரா, திவ்யா கணேசன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் இருந்த நிலையில் டைட்டில் வின்னராக திவ்யா கணேசன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சபரிநாதன் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இதன்மூலம் விஜே அர்ச்சனாவை தொடர்ந்து வைல்ட் கார்டு மூலம் எண்ட்ரீ கொடுத்து பிக்பாஸ் டைட்டில் வென்ற இரண்டாவது போட்டியாளர் என்ற பெருமையை திவ்யா பெற்றுள்ளார்.





















