மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: ”இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்” .. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் 2 பேர் இவர்கள் தான்..!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அது யார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அது யார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7வது சீசனாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலை செய்யப்படுகிறது. 

இந்நிகழ்ச்சி 50 நாட்களை வெற்றிகரமாக கடந்த வாரம் தாண்டியது. பாதி கிணறு தாண்டி விட்ட நிலையில் உள்ளே இன்னும் கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், அக்‌ஷயா உதயகுமார், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, ஆர்.ஜே.பிராவோ, மாயா, பூர்ணிமா, நிக்ஸன் உள்ளிட்டவர்கள் மட்டுமே உள்ளனர். இப்படியான நிலையில் இந்த வாரம் டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஜெயிக்கவில்லை என்றால் வெளியே சென்றவர்களில் 3 பேர் மீண்டும் உள்ளே வரப் போகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது. 

அந்த 3 பேர் வினுஷா தேவி, அனன்யா ராவ், விஜய் வர்மா என சொல்லப்படும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வார நாமினேஷன் பட்டியலில் அர்ச்சனா, விசித்ரா, மணி, ரவீனா, பூர்ணிமா, மாயா, அக்‌ஷயா, ஆர்.ஜே.பிராவோ ஆகியோர் உள்ளனர். இவர்களில் அக்‌ஷயா மற்றும் ஆர்.ஜே பிராவோ இருவரும் வெளியேறப் போகிறார்கள் என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முன்னதாக இந்த சீசனில் ஒரு டபுள் எவிக்‌ஷன் முறை பின்பற்றப்பட்டுள்ளது. அதில், சீரியல் நடிகை வினுஷா தேவி மற்றும் பாடகர் யுகேந்திரன் வாசுதேவன் இருவரும் வெளியேற்றப்பட்டனர். இப்போது மீண்டும் டபுள் எவிக்‌ஷன் முறை பின்பற்றப்படுவது ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முந்தைய சீசன்களை விட பிக்பாஸின் இந்த சீசன் சற்று மந்தமாகவே செல்கிறது. நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்த என்னதான் பல முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அது ரசிகர்களை கவரவில்லை. 

மேலும் முந்தைய சீசன்களில் போட்டியாளர்களிடம் கறார் காட்டிய நடிகர் கமல்ஹாசன், இம்முறை பெரிய அளவில் கண்டிப்பான நபராக இல்லாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இப்படியான நிலையில் இந்த வாரம் நடந்த பூகம்பம் டாஸ்க் மூலம் கமல்ஹாசன் என்ன மாதிரியான கருத்துகளை வழங்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க: Bigg Boss Tamil: நிகழ்ச்சி தயாரிப்பாளரால் பாலியல் தொல்லை.. அதிர வைத்த ஆர்.ஜே.பிராவோவின் கதை..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K Stalin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget