TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
இப்பயிற்சி வகுப்புகளை அகில இந்திய இன்ஷியூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து கட்டணமில்லாமல் வழங்க உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, மற்றும் 2ஏ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் சென்னையில் ஆகஸ்ட் 22 முதல் தொடங்கப்பட உள்ளதாக அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, ’’தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையில் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கு 2026 ஆகஸ்ட் 11 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 22 முதல் பயிற்சி வகுப்புகள்
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 22 முதல் தொடங்க உள்ளன. தேர்விற்கான பாடத்திட்டங்களின்படி தேர்வுகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கேள்வித்தாள்கள் வடிவமைக்கப்பட்டு வகுப்புகளை நடத்த அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி மையம் திட்டமிட்டுள்ளது. திறமை மிக்க பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. காலையில் மாதிரித் தேர்வுகளுடனும் மதிய வேளையில் கலந்துரையாடல் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளை அகில இந்திய இன்ஷியூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து கட்டணமில்லாமல் வழங்க உள்ளது, மேலும் இதுபோன்ற அனைத்துவகை அரசுப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு பயிற்சி பெற்ற 1300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் மத்திய மாநில அரசுப் பணிகளில் இணைந்துள்ளனர்.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் ஏனைய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
வகுப்புகள் நடைபெறும் இடம்
எண். 6/9, அக்ரஹாரம் சந்து, அரண்மனைக்காரன் தெரு (கச்சாலீஸ்வரர் ஆலயம் அருகில்) அமைந்துள்ள இக்கல்வி மையத்தில் 2026, ஆகஸ்ட் 22 முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.00 மணிவரையில் வகுப்புகள் நடைபெறும். ஆர்வமுள்ள தேர்வர்கள் முன்பதிவு செய்வதுடன் தங்களது புகைப்படம் மற்றும் முகவரிக்கான ஆதார நகலுடன் வர வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு:
95665 23556
90427 27276
79045 22336
94446 41712
தொடர்பு கொள்ளவும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















