Bigg Boss 6 Tamil: ‛யார்டா ஆன்ட்டி...’ கோலாரை ஒரு வழியாக்கிய தனலட்சுமி!
நிகழ்ச்சியில் 2வது போட்டியாளராக வந்த அசல் கோலார் கடும் சர்ச்சையில் சிக்கினார். சக பெண் போட்டியாளரை அனுமதியின்றி தொட்டு தொட்டு பேசுவது, திட்டினாலும் இதே வேலையை தொடர்வது என கோளாறான வேலைகளை செய்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் கோலார் - தனலட்சுமி இடையே நடந்த காரசார வாக்குவாதத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் ஆரம்பம் முதலே நல்ல விறுவிறுப்பாக சென்றது.
இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை மைனா நந்தினி உள்ளே வந்துள்ளார்.
இதில் தொடக்கம் முதலே தனலட்சுமி மீது நெகட்டிவ் விமர்சனங்கள் விழ தொடங்கியது. முதல் வாரமே ஜிபி முத்துவிடம் வம்பிழுத்தது, கமலிடம் விமர்சனம் பெற்றது என அவர் , கதை சொல்லும் டாஸ்க்கில் அனைவரையும் அழ வைக்கும் அளவிற்கு அம்மா சென்டிமென்ட் கதை சொன்னார். அதனால் அவரை நாமினேஷன் ஃப்ரீ பிராஸசிற்கு சக போட்டியாளர்கள் அழைத்து சென்றனர்.
Fight 😳 #GPMuthu #GPMuthuArmy #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/TtayP83NwQ
— GP Muthu Army (@drkuttysiva) October 19, 2022
அதேசமயம் நிகழ்ச்சியில் 2வது போட்டியாளராக உள்ளே வந்த அசல் கோலார் கடும் சர்ச்சையில் சிக்கினார். சக பெண் போட்டியாளரை அவரின் அனுமதியின்றி தொட்டு தொட்டு பேசுவது, திட்டினாலும் இதே வேலையை தொடர்வது என கோளாறான பல வேலைகளை அசல் செய்தார். இதன் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதனால் யாரிடம் இவர் திட்டு வாங்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு தனலட்சுமி பிள்ளையார்சுழி போட்டுள்ளார்.
அந்த சண்டையில் உனக்கே இவ்வளவு தைரியம் இருக்கும்ன்னா, எனக்கு எவ்வளவு இருக்கும் என்ற அளவுக்கு நேருக்கு நேர் மல்லுகட்டினார். தலைவர் ஜிபி முத்து தனலட்சுமி விஷயம் என்பதால் உள்ளே வரவில்லை. அஸீம், ராம் ராமசாமி உள்ளிட்டோர் இருவருக்குமிடையேயான சண்டையை தடுக்க முயன்றனர். அப்போது தனலட்சுமி, “நான் இவனை அண்ணான்னு கூப்பிட்டா..என் அப்படில்லாம் கூப்பிடுறன்னு கேட்டுட்டு என்ன பார்த்து பெரியம்மான்னு சொல்றான். பாடி ஷேமிங் பண்றான். இதேபோல நான் டாஸ்க் பேசிட்டு வெளியே வந்ததும் பேசவே விட்டுருக்க கூடாது. பாம் பாம் அடிச்சி வெளியே அனுப்பிருக்கணும் என அசிங்கமா சொல்றான்.
உடனே அசல் நீ, வா போன்னு என்னைப் பார்த்து சொல்ற என கேட்டதுக்கு, நீ மட்டும் என்ன வா, போ என்று தானே சொல்ற. அதுமட்டுமல்ல என்னை பார்த்து ஆன்ட்டின்னு சொல்ற.நீ சோறு போடுறியா. உனக்கென்ன வலிக்குது. நான் எப்பிடியும் இருந்துட்டு போறேன். உனக்கென்ன வலிக்குது என சரமாரியாக கேட்கிறார். அப்போது சிலர் இது பிராங்க் என சொல்ல, பின்னாடி இருந்து ஒரு போட்டியாளர் சண்ட போடுறதுன்னா உண்மையா சண்டை போடுங்கப்பா என தெரிவிக்கிறார்.