Bigg Boss 6 Tamil: ‘குறும்படம் போட்ட கமல்...’ கப்சிப் ஆன பிக்பாஸ் வீடு... இருக்கு இன்னைக்கு சம்பவம் இருக்கு!
Bigg Boss 6 Tamil : பழி போடுவது ஈசி, பழியை தாங்குவது கஷ்டம். அதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சில பேரை காப்பாத்தியாக வேண்டும். சிலரை யாராலும் காப்பாத்த முடியாது - கமல்
இந்த வாரத்தின் பஞ்சாயத்தை தீர்க்கும் வகையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் குறும்படம் திரையிடபடவுள்ளது.தீபாவளி பண்டிகையை தொடர்ந்து இந்த வாரத்தில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.டாஸ்க் கொஞ்சம், சேட்டை கொஞ்சம், போட்டி கொஞ்சம் என அனைத்தும் அளவாக இருந்தாலும், இந்த டாஸ்க்கில்சண்டையும் சச்ரவும் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.
அடித்து மிதித்து கீழே தள்ளிவிட்டு, பொம்மைகளை டால் ஹவுஸில் வைப்பதற்குள், அனைத்து போட்டியாளர்களும் ஒரு வழி ஆகிவிட்டனர். கடந்த வாரத்தில், டால் ஹவுஸ்குள் செல்லும் போது ஷெரின் கீழே விழுந்தது தொடர்பாக அசீம் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவருக்கும் இடையில் சண்டை உண்டானது.
View this post on Instagram
இதுதொடர்பாக, வார இறுதிநாளான இன்று நடிகர் கமல் வழக்கம் போல் பஞ்சாயத்து செய்யவுள்ளார். யாரு கீழே தள்ளிவிட்டார்கள் என்ற கேள்விக்கு அசீம், ஏ.டி.கே ஆகிய சிலர் தனலட்சுமி என பதில் கூறினர். ஆனால் தனலட்சுமி உறுதியாக, அவர் அப்படி செல்லவில்லை என்றும் தப்பு செய்தால் மன்னிப்பு கேட்டு வெளியே செல்கிறேன் என்று பேசினார், அதற்கு குரும்படம் போடுகிறேன் என கமல் சொன்னார்.
#Day20 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/sSjyxP99Jk
— Vijay Television (@vijaytelevision) October 29, 2022
முன்பாக வந்த ப்ரோமோவில், “ என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். எனக்கு தெரியும். ஆனால், உள்ளே இருப்பவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. பழி போடுவது ஈசி, பழியை தாங்குவது கஷ்டம். அதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சில பேரை காப்பாத்தியாக வேண்டும். சிலரை யாராலும் காப்பாத்த முடியாது.” என்று கண் அடித்து கூறினார் கமல்.
மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: ‛பிக்பாஸ் கதவை திறங்க... நான் போகணும்...’ நள்ளிரவில் அலறிய தனலட்சுமி!