மேலும் அறிய

Trump Threatens Iran: ''நீங்கள் நிலைகுலையப் போகிறீர்கள்“; ஏஐ புகைப்படத்துடன் எச்சரிக்கை செய்த ட்ரம்ப்; மீண்டும் போர்.?

US Iran War: அமெரிக்கா-ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை முடங்கியுள்ள நிலையில், தனது சமூக வலைதள பக்கதில், ஏஐ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ஈரானுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அவற்றில் எந்த முடிவும் எட்டப்படாமல், இன்னும் இழுபறியிலேயே உள்ளது. இரு தரப்பும் மாறி மாறி புதிய நிபந்தனைகளை விதித்து வருவதால், பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. இந்த நிலையில், ஈரானுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக, தனது சமூக வலைதள பக்கத்தில், ஏஐ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மிரட்டியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அது குறித்து பார்க்கலாம்.

ட்ரம்ப் விடுத்த மிரட்டல் என்ன.?

தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், அதில் “நீங்கள் நிலைகுலையப் போகிறீர்கள்“ என்று கூறியுள்ளார். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அந்த புகைப்படத்தில், அவர்  வித்தியாசமான ராணுவ சீருடையில் இருப்பது போன்றும், அவருக்கு மேலே போர் விமானங்கள் பாய்வது போன்றும், கீழே போர்க்கப்பல்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு கீழே, 'YOU'RE GETTING DISCOMBOBULATED என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விழிப்புடன் இருக்கும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு

ட்ரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு வலு சேர்க்கும் விதமாக, மத்திய கிழக்கில் தங்கள் போர் விமானங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அமெரிக்க படைகள் மிகவும் விழப்புடன் இருப்பதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு(CENTCOM) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

“மீண்டும் போரை தொடங்க அமெரிக்கா முழு திறனையும் கொண்டுள்ளது“

இதேபோல், சிங்கப்பூரி நடந்த பாதுகாப்பு உச்சிமாநாட்டிற்கு சென்ற அமெரிக்க போர் துறை செயலாளர் பீட் ஹெக்செத், அங்கு உரையாற்றியபோது, தேவைப்படும் பட்சத்தில், போரை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்காவிடம் முழு திறனும் உள்ளதாக கூறியுள்ளார். இதுவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது.

அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் ஈரான்

இதனிடையே, பென்டகனில், இஸ்ரேல் மற்றும் லேபனான் நாடுகளின் ராணுவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், 47 ஆண்டுகளுக்கு முன்பே கட்டாயம் என்ற சொல்லாடலுக்கு இஸ்லாமிய அரசு விடை கொடுத்துவிட்டதாகவும், இறதி ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்றும், ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகெய் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் நடைபெற இருக்கும் 4-வது சுற்று பேச்சுகார்த்தைகளுக்காக இரு நாடுகளும் தயாராகி விருகின்றன.

ஏற்கனவே, எந்ரேமும் மீண்டும் போர் தொடங்குமோ என்ற அச்சயத்தில் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வரும் சூழலில், பேச்சுவார்த்தைகளிலும் முடக்கம் ஏற்பட்டு, ட்ரம்ப்பும் தற்போது எச்சரிக்கும் தொனியில் பதிவை வெளியிட்டுள்ளதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, எரிபொருள் பிரச்னையால் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, சிலிண்டர் விலைகள் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன. இதனால், மீண்டும் போர் ஏற்படும் பட்சத்தில், நிலைமை மேலும் மோசமடையும் என்பதே நிதர்சனமான உண்மை.

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget