IPL 2026 Final RCB vs GT: ஐபிஎல் பட்டம் யாருக்கு? கோப்பையை எடுத்து வைக்கச் சொல்லும் ஆர்சிபி - குஜராத்! இன்னும் சற்று நேரத்தில் குஸ்தி!
IPL 2026 RCB vs GT: அகமதாபாத்தில் இன்னும் சற்று நேரத்தில் ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19வது சீசன் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றில் குவாலிஃபயர் 1 போட்டியில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணியும், குவாலிஃபயர் 2 போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் அணியும் மோதுகின்றனர்.
இன்று இறுதிப்போட்டி:
இந்த தொடர் முழுவதும் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தனர். இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடும் அணி்யே 2026ம் ஆண்டின் புதிய சாம்பியன் ஆகும். அகமதாபாத் மைதானத்தைப் பொறுத்தமட்டில் குஜராத் அணிக்கு அது சொந்த மைதானம் என்பது சிறப்பம்சாகும். பெங்களூர் அணிக்கு நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்குகிறது.
இந்த மைதானத்தைப் பொறுத்தமட்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிற்கும் ஏற்றதாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 51 ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 26 போட்டியிலும், 2வது பேட் செய்த அணி 25 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் மற்றும் 2வது பேட்டிங் என இருவருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
பேட்டிங் தூண்கள்:
இந்த மைதானத்தில் அதிகபட்சமாக பஞ்சாப் அணி 243 ரன்கள் வரை விளாசியுள்ளனர். அதிகபட்சமாக குஜராத் 204 ரன்களை எட்டிப்பிடித்துள்ளது. இதனால், இன்றைய போட்டியில் ரன்மழை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆர்சிபி அணியைப் பொறுத்தமட்டில் வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி, படிக்கல், ரஜத் படிதார், டிம் டேவிட், க்ருணல் பாண்ட்யா, ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் உள்ளனர்.
குஜராத் அணியிலும் சுப்மன்கில், சாய் சுதர்சன், பட்லர் அந்த அணிக்கு தூண்களாக உள்ளனர். மிடில் ஆர்டரில் வாஷிங்டன் சுந்தர், நிஷாந்த், ஹோல்டர் உள்ளனர். இம்பேக்ட் வீரராக கடந்த போட்டிகளில் அசத்திய ராகுல் திவேதியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வம் காட்டுவார். இரு அணியிலும் பேட்டிங் பட்டாளம் வலுவாக இருப்பதால் ரன்மழைக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஓங்குமா பந்துவீச்சாளர்கள் கை?
ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தமட்டில் பந்துவீச்சாளர்களின் கையிலே ஒரு அணியின் வெற்றி உள்ளது. சமீபகாலமாக, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே மைதானம் வடிவமைக்கப்படும் சூழலில், பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது சவாலாக மாறியுள்ளது.
ஆர்சிபி அணிக்கு பந்துவீச்சு தூணாக புவனேஷ்வர்குமார், ஹேசில்வுட், ரஷீக் சலார், ஜேக்கப் டஃபி உள்ளனர். இவர்களது வேகத்தில் துல்லியமும், லைன் மற்றும் லென்த் இணைந்தால் குஜராத்திற்கு சவாலாக மாறும். சுழலில் க்ருணல் பாண்ட்யா, சுயாஷ் சர்மா உள்ளனர். பகுதிநேர பந்துவீச்சாளராக ஷெப்பர்டும் முக்கிய பங்காற்றுகிறார்.
குஜராத் அணிக்கு பந்துவீச்சில் முன்னாள் ஆர்சிபி வீரர் முகமது சிராஜ் பலமாக உள்ளார். அவருடன் ரபாடா அச்சுறுத்தலாக உள்ளார். இவர்களுடன் ஹோல்டர் உள்ளார். இவர்கள் வேகத்தில் அசத்தினால் குஜராத் வலுபெறும். சுழலில் ரஷீத்கான், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.
இந்த மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி இந்தாண்டு 86 ரன்களுக்கு சுருண்டது. இதனால், எந்த அணியின் பந்துவீச்சாளர்களின் கை ஓங்குகிறதோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசம் ஆகும். இதுபோன்ற இறுதிப்போட்டியில் ஒரு வித அழுத்தம் வீரர்களுக்கும் இருக்கும்.
இன்னும் சற்று நேரத்தில்:
இரு அணியிலும் அனுபவம் மற்றும் திறமையான வீரர்கள் இருப்பதால் அவர்கள் அதை திறமையாக கையாள்வார்கள் என்றும் கருதப்படுகிறது. இதனால், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்த போட்டியை காணலாம்.
Before You Go
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ட்ரெண்டிங் செய்திகள்



















