Priyanka Reply: கணவர் எங்கே....? பிரியங்காவிற்கு கேள்விகளை எழுப்பும் ரசிகர்கள்...!
அனைவரும் பிரவீனை பற்றி கேட்கிறீர்கள். இதற்கான பதிலை நான் அடுத்த பதிவில் சொல்கிறேன் - பிரியங்கா
![Priyanka Reply: கணவர் எங்கே....? பிரியங்காவிற்கு கேள்விகளை எழுப்பும் ரசிகர்கள்...! Bigg boss tamil 5 runner priyanka deshpande replies to fans question on where is her husband praveen Priyanka Reply: கணவர் எங்கே....? பிரியங்காவிற்கு கேள்விகளை எழுப்பும் ரசிகர்கள்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/f37f2fb412389d92fdf100c8ccbdd0c6_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரை செல்வி, அக்ஷரா, நிரூப், சிபி சந்திரன், வருண் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அமீர், சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.
இவர்களில் ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஐந்து பேரில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும், பிரியங்கா ரன்னராகவும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், பிரியங்கா சமீபத்தில் தனது யூட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பிரியங்கா தனது ரசிகர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். மேலும், தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. தன்னை வெறுத்தவர்களுக்கும் நன்றி. என்னை மன்னித்துவிடுங்கள். இதற்குப் பிறகு உங்களுக்கு நல்ல என்ட்டர்டெயின்மெண்ட் கொடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.
அப்போது ரசிகர்கள், ‘பிக்பாஸ் வீட்டில் ஏன் நீங்கள் பிரவீனை பற்றி பேசவில்லை. பிரவீன் எங்கே?’ என்கிற கேள்விகளை கேட்டனர். இதற்கு பிரியங்கா, அனைவரும் பிரவீனை பற்றி கேட்கிறீர்கள். இதற்கான பதிலை நான் அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேசமயம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு நிரூப்புடன் இருக்கும் புகைப்படங்களை பிரியங்கா பகிர்ந்திருந்தார். ஆனால் அவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை எதற்காக பதிவிடவில்லை எனவும் ரசிகர்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Thanjavur School Girl Suicide | தஞ்சை மாணவி தற்கொலை : அதிரவைக்கும் இறுதி வாக்குமூலம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.
Relationship Tips | காதலோ, கணவன் மனைவியோ.. சண்டை கூட இப்படித்தான் இருக்கணும்.. செம்மையான 5 டிப்ஸ்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)