Relationship Tips | காதலோ, கணவன் மனைவியோ.. சண்டை கூட இப்படித்தான் இருக்கணும்.. செம்மையான 5 டிப்ஸ்..
எக்காரணம் கொண்டு ஆக்ரோஷமாகவோ, கத்தவோ செய்யாதீர்கள். உங்கள் துணையை அவமானப்படுத்தாமல் இருங்கள்
அன்புதான் அனைத்து உறவுகளுக்கும் அச்சாரம். அன்பு சிறிது பிசகினாலும் இந்த உலகத்தில் சமநிலை குலைந்துவிடும். அதேசமயம் ஒரு உறவு நிலைப்பதற்கு அன்பு மட்டுமே போதுமானது இல்லை.
அடுத்தவருக்கு கொடுக்கும் மரியாதை, அவரைப் பற்றிய புரிதல், அவர் பேசும்போது உன்னிப்பாக கவனித்தல் ஆகியவை உறவு வலுப்பட காரணமாக அமைபவை. ஆனால் உறவுகளுக்குள் நிகழும் சண்டையின்போது எழும் வாக்குவாதத்தில் நமது பேச்சோ இல்லை பதிலோ உறவின் நீண்ட கால நம்பகத்தன்மையை பாதிக்கலாம்.
உளவியல் நிபுணரும், எழுத்தாளருமான டாக்டர் நிக்கோல் லெபெரா, தி ஹோலிஸ்டிக் சைக்காலஜிஸ்ட் என்று பிரபலமாக அறியப்படுகிறார். அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்த பதிவானது, சிறந்த தகவல் தொடர்பால் வலுவான உறவை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை விளக்குகிறது.
மேலும் அவர் கூறுகையில், "மக்கள் அவர்களுக்கு இடையே நம்பமுடியாத அளவு அன்பைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்குத் தேவையானதை அல்லது அவர்கள் உணர்வதை எவ்வாறு தொடர்புகொள்வது என்பது அவர்களுக்குத் தெரியாவிட்டால் அவர்களுக்குள் இருக்கும் உறவு இறுதியில் செயல் இழக்கும்.
துரோகம், ஒருவருக்கு மற்றொருவர் அடிமையாதல், குடும்பப் பிரச்சினைகள், இணக்கமின்மை ஆகியவை உறவின் முடிவிற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தாலும், பல நேரங்களில் தவறான தகவல் பரிமாற்றமோ, இல்லை ஒருவர் கூறும் விஷயத்தை மற்றவர் சரியாக புரிந்துகொள்ளாததுதான் பிரதானமாக இருக்கும்.
குறிப்பாக பண பிரச்சினை அல்லது துரோகத்தால் பெரும்பாலான உறவுகள் முடிவடைகின்றன என்று பலர் கூறுவார்கள். உண்மை என்னவென்றால், தொடர்பு சிக்கல்களால்தான் உறவுகள் முடிவடைகின்றன.
நம்மில் பலர் மோதல்களை விரும்புவதில்லை. முரண்பாடுகளைப் புறக்கணிக்கும் நமது போக்கு, நம்மில் பலர் குறிப்பாக பெரியவர்கள் ஒருவரையொருவர் குறை கூறிக்கொள்ளும் வீடுகளில் வளர்ந்ததால் இருக்கலாம்
மோதல் என்பது எல்லா உறவுகளிலும் ஒரு பகுதியாகும். அதேசமயம் ஆரோக்கியமான மோதல்களுக்கு சிறந்த வழி; நல்ல தொடர்பு திறன்களைப் பெறுவதாகும். இத்தகைய மோதல்கள் மக்களிடையே ஆழமான உணர்ச்சித் தொடர்பை உருவாக்கும்” என்றார்.
துணையிடம் ஆரோக்கியமாக சண்டை போட டிப்ஸ்
1. உங்கள் துணையை பார்வையால் அலட்சியப்படுத்தாமல், அவரது யதார்த்தத்தை மறுக்காமல் முழுமையாகக் கேளுங்கள்.
2. விவாதம் செய்வதற்கு முன், இதை பேசும் மனநிலையில் உங்கள் துணை இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்
3. அவரது அனுபவத்தைப் பற்றி ஆர்வமாக இருங்கள்.
4. சண்டையின்போது, பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உங்கள் துணையை உணர செய்யுங்கள்
5. எக்காரணம் கொண்டு ஆக்ரோஷமாகவோ, கத்தவோ செய்யாதீர்கள். உங்கள் துணையை அவமானப்படுத்தாமல் இருங்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்