Jithan Ramesh: “2010 ஆம் ஆண்டை மறக்க நினைக்கிறேன்; காரணம் இதுதான்”: ஜித்தன் ரமேஷ்
பிக்பாஸ் தான் என்னை 2k கிட்ஸுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது என நடிகர் ஜித்தன் ரமேஷ் கூறியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமானவர் ஜித்தன் ரமேஷ்.
பிக்பாஸ் தான் என்னை 2k கிட்ஸுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது என நடிகர் ஜித்தன் ரமேஷ் கூறியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமானவர் ஜித்தன் ரமேஷ்.
ஜித்தன் ரமேஷ் பேட்டி:
ஜித்தன் படம் 2005ல் ரிலீஸ் ஆனது. அப்போ இருப்பவர்கள் அந்தப் படத்தின் மூலம் என்னைத் தெரியும். இப்போ பிக்பாஸ் போய்ட்டு வந்த பின்னர் ஜித்தன் ரமேஷ் பற்றி 2k கிட்ஸுக்கும் தெரியவந்துள்ளது. அதுதான் எனக்கு பிக்பாஸ் தந்த பரிசு.
எங்க, எத்தனை சுவையாக ஸ்பெஷல் டிஷ் சாப்பிட்டாலும் எனக்கு ஃபேவரைட் ஃபுட் அம்மா செய்யும் தால். நான் பிக்பாஸுக்குப் போகும் போது 72 கிலோ இருந்தேன். திரும்ப வரும்போது 65 கிலோ. அங்க சாப்பாடு எனக்கு செட் ஆகல. நான் திரும்பி வரேன்னு தெரிஞ்சவுடனேயே அம்மா எனக்காக அந்த தால் செய்து வைத்திருந்தார்கள்.
ரீசன்ட்டா ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு வந்த செய்தி என்னை பாதித்தது. அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உணவகங்கள் உணவில் தரமற்ற சேவை தருவது ரொம்ப பாவமான செயல். நான் ஒரு ஃபுட்டி. அதனாலேயே எனக்கு இப்போதெல்லாம் வெளியில் சாப்பிடவே பயமா இருக்கு.
படார்னு அடிச்சிருப்பேன்:
ஒருவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் ஃபேமஸ் ஆகனும்னு சீரியஸா நினைச்சிருந்தா படார்னு யாரையாவது அடிச்சிருப்பேன். ஆனால் அங்க ரெட்கார்டுனு ஒரு தடை இருந்தது. அதனால் அங்கு அடக்கி வாசிச்சேன். பிக்பாஸில் எனக்கு நிறைய கோபம் வந்துச்சு. ஆனால் அப்பா, தம்பி இமேஜெல்லாம் பார்த்துதான் அமைதியாக இருந்தேன். வீட்ல நானும் என் தம்பியும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். அண்ணன், தம்பியாகத் தான் பழகிக்கோவோம். வீட்டில் நான் அம்மா செல்லம். ஜீவா அப்பா செல்லம்.
கம்பேர் பண்ணா கோவம் வரும்:
என் கிட்ட யாராவது உங்க அப்பா பெரிய தயாரிப்பாளர், உங்க தம்பி பெரிய நடிகர். நீங்க ஏன் எதுவும் சாதிக்கலைன்னு கேட்பாங்க. அப்ப எனக்கு ரொம்ப கோவம் வரும். எதுக்கு கம்பேர் பண்றீங்க. என் கிட்ட என்னப் பத்தி என்ன கேட்கணுமோ அதை கேளுங்க என்பேன். பேக்கிரவுண்ட் இருப்பதால் தான் இது மாதிரியான குடைச்சல் எல்லாம் வருது. வீட்டுல இதுமாதிரியெல்லாம் டிஸ்கஸனே வராது. ஆனா வெளியில் இருந்து சிலர் கேட்கும் போதுதான் கோவம் வருது. ரொம்ப கோவம் ஏறும்போது எந்திருச்சு போய்டுவேன்.. ஒரு 10 வரை எண்ணிட்டு திரும்பி வந்துடுவேன்.
2010ஐ மறக்கணும்னு நினைக்கிறேன்:
என் வாழ்க்கையில் நான் ஒரு வருஷத்த அப்படியே எரேஸ் பண்ணனும்னா அது 2010 தான். என் பொண்ணு அப்போ மாடியில் இருந்து தவறி விழுந்துட்டாங்க. அவள மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அப்புறம் பெரிய காயங்கள் இல்லாமல் சரியாகிட்டாங்க. ஆனால் அந்த சில நாட்கள் நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. நான் கும்பிடாத தெய்வமும் இல்லை. அந்த வருஷத்தை மட்டும் என் வாழ்க்கையில் இருந்து நான் அழிக்க விரும்புகிறேன்.
எதிர்கால ஆசைகள்:
எனக்கு ரொம்ப நாளாகவே சைக்கோபாத் கதை பண்ணனும்னு ஆசை. அந்த ஆசை இப்போதான் நிறைவேறியிருக்கு. படம் சீக்கிரம் ரிலீஸ் ஆகப்போகுது. அதேபோல் எனக்கு ஒரு சூப்பர் ஹீரோ கதை பண்ணி கிட்ஸ் மனசுல இடம் பிடிக்கனும்னு ஆசை. அதைத்தான் அடுத்து செய்வேன்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நான் சென்றபோது, கமல் சார் உங்க அப்பா ஒரு பாஸ், உங்க தம்பி ஒரு பாஸ், நீங்க எதுக்கு பாஸ் இங்க வந்தீங்கன்னு கமல் சார் கேட்டார். நான் சார் இந்த பாஸ பார்க்கத்தான் வந்தேன் என்று சொன்னேன். அவரோட விக்ரம் படத்தை பார்த்தேன். சார் ஃபெண்டாஸ்டிக் பெர்ஃபார்மன்ஸ். வேற லெவல்.
இவ்வாறு ஜித்தன் ரமேஷ் சொன்னார்.