மேலும் அறிய

Bharathiraja Health: உயர் சிகிச்சைக்காக பிரபல தனியார் மருத்துவமனைக்கு பாரதிராஜா மாற்றம்..! ரசிகர்கள் வேதனை..!

பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை, அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவிற்கு அங்கு உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அவரது உடல்நலம் குறித்த அறிக்கையை  வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.நகரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா நான்கு நாட்களில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவர் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, பிரபல இயக்குநரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தி.நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா தற்போது உயர் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கடந்த 1942ம் ஆண்டு பிறந்த பாரதிராஜா கடந்த 23-ந் தேதிதான் தன்னுடைய 81வது பிறந்தநாளை கொண்டாடினார். தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாக, பிரகாஷ்ராஜின் தந்தையாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படைப்புகள் பலவற்றைய இயக்கிய பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து ஒதுங்கியிருந்தார். சமீபகாலமாக முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சசிகுமாருடன் கென்னடி கிளப், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டுப்பிள்ளை, சிம்புவுடன் ஈஸ்வரன் என பல படங்களில் நடித்துள்ளார். 

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமைகளான சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை இயக்கியவர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பலரையும் கோலிவுட்டிற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர் என்ற பல பெருமைகளை கொண்டவர். தேசிய விருது, மாநில விருது என்று பல விருதுகளை குவித்துள்ள பாரதிராஜா உடல்நலம் தேற வேண்டும் என்று திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் உடல்நலம் தேறி வர வேண்டும் என்று நடிகை ராதிகா பிரான்சில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: ஒரே ஒரு ப்ரொமோ... ஊரே புறப்படத் தயாராகும் பிக்பாஸ் வீடு... எகிறும் சீசன் 6!

மேலும் படிக்க : Ansiba Hassan: ஜார்ஜ் குட்டி மகளா இது... க்ளாமரில் டாஃப் கியர் போட்டு ஓவர் ஸ்பீடில் செல்லும் அன்சிபா அசன்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
Embed widget