Bharathi kannamma Serial | செம்ம ஷாக்.. இதுக்கு ஹீரோயின் மாற்றம்தான் காரணமா.. சோகத்தில் பாரதி கண்ணம்மா Fans
Bharathi Kannamma Serial TRP Rating: பாரதி கண்ணம்மா தொடர் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணமா தொடர் குடும்பப் பெண்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. இதனால் டி.ஆர்.பி ரேட்டிங்கில் எப்போதும் டாப்பில் பாரதி கண்ணம்மா இருக்கும். ஆனால் சமீப காலமாக பாரதி கண்ணம்மா தொடர் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்துள்ளதாகவும், அதற்கு முக்கிய காரணம் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினிக்கு பதிலாக வினுஷா நடிப்பதுதான் என சொல்லப்படுகிறது.
முன்னதாக, கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று ரோஷினி சில தவிர்க்க முடியாத காரணங்களால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட ரோஷினி தான் விலகியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
View this post on Instagram
இதனால் அவருக்கு பதிலாக டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமடைந்த வினுஷா தேவியை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்தது.
View this post on Instagram
View this post on Instagram
அதற்காகான அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், முதற்கட்டமாக நீதிமன்ற காட்சிகள், அஞ்சலியை காப்பாற்றுவது உள்ளிட்ட காட்சிகளில் வினுஷா நடித்தார். ஆனால் தொடர்ந்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினியின் நடிப்பை பார்த்து பழகிய ரசிகர்கள் தற்போது வினுஷாவின் நடிப்பில் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் வினுஷா தேவியின் பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இதனால் தற்போது பாரதி கண்ணம்மா தொடர் டி.ஆர்.பி.ரேட்டிங் சரிவை சந்துள்ளதாக சொல்லப்படுகிறது.