Beast Movie Update: புத்தாண்டு கிஃப்ட் - வெளியானது பீஸ்ட்டின் மாஸ் அப்டேட்
புத்தாண்டையொட்டி பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியிருக்கும் நெல்சன் திலீப்குமார் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கிங்ஸ் லீ உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் , நெல்சன் கூட்டணியில் வெளியான டாக்டர் திரைப்படம் வசூல் வேட்டை நடத்திய நிலையில் பீஸ்ட் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
பீஸ்ட் படத்தில் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மால் ஒன்றை கைப்பற்றி தீவிரவாதிகள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் மக்களை காப்பாற்றுவதுதான் கதை எனவும், படத்தில் விஜய் ரகசிய அதிகாரியாக நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 PM 🎉
— Sun Pictures (@sunpictures) December 31, 2021
கடத்தல் கதைகளை கையில் எடுப்பதுதான் நெல்சனின் ஏரியா ஆஃப் இண்ட்ரஸ்ட் என்பதாலும், ஒருவேளை பீஸ்ட் படமும் கடத்தல் சம்பந்தப்பட்ட கதையாக இருந்தால் விஜய்யை வைத்து அந்தக் கதையை அவர் எப்படி காட்சிப்படுத்தியிருப்பார் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
Happy New Year Nanba ❤ ⁰From team #Beast @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @manojdft @Nirmalcuts @anbariv #BeastFromApril pic.twitter.com/xNYz8kGYwP
— Sun Pictures (@sunpictures) December 31, 2021
இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக பீஸ்ட் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, பீஸ்ட் படத்தின் புதிய லுக் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் படம் ஏப்ரல் மாதம் வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜய் படு மாஸாக இருக்கிறார். புத்தாண்டு பரிசாக ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த அப்டேட் வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து புது போஸ்டரை வைரலாக்கிவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Shruti Haasan Reply | உனக்கு எத்தனை ப்ரேக் அப்? கேள்விகேட்ட நெட்டிசனுக்கு குட்டு வைத்த ஸ்ருதிஹாசன்..