மேலும் அறிய

`Beast' update | கறுப்பு சூட்.. நெருப்பு லுக்.. வைரலானது பீஸ்ட் ஷூட்டிங் ஸ்டில்..

தற்போது `பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருவதோடு, விஜய் ரசிகர்கள் அதனைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

`மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் `பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள `டாக்டர்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெகு மக்கள் ஆதரவோடு திரையிடப்பட்டு வருகிறது. `பீஸ்ட்’ படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நடிகர் விஜய் பிறந்தநாளின் போது, `பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், அதனுடன் சில போஸ்டர்களும் வெளியிடப்பட்டு, இணையத்தில் கலக்கின. தற்போது `பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருவதோடு, விஜய் ரசிகர்கள் அதனைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் மொபைல் ஃபோன்களுக்கு அனுமதி இல்லை என்ற போதும், இந்த வீடியோ யாரால் எடுக்கப்பட்டது, எப்படி வெளியானது என்ற தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை. `பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு லீக் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

`Beast' update | கறுப்பு சூட்.. நெருப்பு லுக்.. வைரலானது பீஸ்ட் ஷூட்டிங் ஸ்டில்..

வைரலாகி வரும் இந்த லீக் வீடியோவில், நடிகர் விஜய் ஸ்டைலான கறுப்பு நிற சூட் அணிந்திருக்கிறார். இதனை ரசிகர்கள் வெகுவாக ரசித்து, ஆரவாரம் செய்து வருகின்றனர். எனினும் சில ரசிகர்கள் இந்த லீக் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதோடு, இந்த வீடியோக்களைப் பகிர்பவர்களிடம் அதனைத் தவிர்க்குமாறும், விஜய் படத்தை முழுவதுமாகத் திரையரங்குகளில் கொண்டாடுமாறும் கூறி வருகின்றனர். 

கடந்த ஆகஸ்ட் மாதம், `பீஸ்ட்’ பட நடிகை பூஜா ஹெக்டே படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பக்கத்தில் வெளியிட்டார். அதில் படப்பிடிப்பு வாகனங்கள் நின்றுகொண்டிருக்க, இடம் சென்னை என்று குறிக்கப்பட்டிருந்தது. எனினும், சில மணி நேரங்களில் இந்தப் படம் நீக்கப்பட்டது.

`Beast' update | கறுப்பு சூட்.. நெருப்பு லுக்.. வைரலானது பீஸ்ட் ஷூட்டிங் ஸ்டில்..

நடிகர் விஜய் நடித்து வரும் `பீஸ்ட்’ திரைப்படம் தங்க கடத்தல் பற்றிய திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. `டாக்டர்’ படத்தின் ப்ரொமோஷன்களின் போது, தவறுதலாக இந்த விவகாரத்தை உறுதி செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். `பீஸ்ட்’ படம் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருக்கின்றனர். ஷைன் டாம் சாக்கோ, செல்வராகவன், யோகி பாபு ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர். 

`டாக்டர்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. `டாக்டர்’ படத்தைப் போலவே, `பீஸ்ட்’ படமும் சிறப்பாக அமைய வேண்டும் என ரசிகர்கள் தங்கள் ஆசையைத் தங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். `பீஸ்ட்’ படம் சன் பிக்சர்ஸால் தயாரிக்கப்படுகிறது; அனிருத் பின்னணி இசை அமைத்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Embed widget