Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி படத்திற்கு தடை - விளக்கம் கொடுத்த மஹா படக்குழு
சிம்பு மற்றும் பிரபல நடிகை ஹன்சிகா மீண்டும் இணைந்துள்ள மஹா படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக எழுந்த செய்திக்கு பதில் அளித்துள்ளது படக்குழு
யு.ஆர். ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் மஹா. நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஹன்சிகா மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ள இந்த படத்தில் பிரபல நடிகர் சிம்புவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பி ராமையா மற்றும் முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜிப்ரானுக்கு மஹா திரைப்படம் 25வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
The most awaited STR’s first look in #MAHA is here. It is going to be a visual treat for #STR fans in 2020. #MAHA @ihansika @MathiyalaganV9 @EtceteraEntert1 @malikstreams @GhibranOfficial @SanchetiReshma @MahatOfficial @laxmanmfi @DoneChannel1 @hariharannaidu pic.twitter.com/5I6dWH3oMP
— U.R.Jameel (@dir_URJameel) January 2, 2020
கடந்த ஜனவரி 2020ம் ஆண்டே இந்த படத்தின் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் மற்றும் பல காரணங்களால் அக்டோபர் மாதம் 2020ல் படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா தாக்கம் குறையாத நிலையில் படம் வெளிவருவது தடைபட்டு கொண்டே உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தான் படம் வெளிவருவது தாமதமாகிறது என்று செய்திகள் வெளியான நிலையில், அந்த தகவலை படக்குழு மறுத்துள்ளது. மேலும் படத்தின் வெளியீட்டு தேதி சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
Hello Makkale!! We are very happy & excited to announce the wrap of #Maha an @ihansika 50th film produced by @MathiyalaganV9 @Etceteraenter & @malikstreams it been a great journey with this lovely team and to mention and big ton of thanks to our beloved @silambarasanTRS pic.twitter.com/L9G5ooZiz2
— Etcetera Entertainment (@Etceteraenter) October 29, 2020
நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் என்பது பலரும் அறிந்ததே. 'ஷக்கலக்க பூம்பூம்' என்ற பிரபல நாடகத்திலும் ஹன்சிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த அவர் 2007ம் ஆண்டு வெளியான தேசமுதுரு என்ற அல்லு அர்ஜுனின் தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த அவர் தமிழில் தனுஷ் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிளை படத்தின் மூலம் அறிமுகமானார்.
வாரத்தின் முதல் நாள்... இந்த 5 பாடல்களை கேட்டு சுறுசுறுப்பாக துவக்கலாமே!
இந்நிலையில் அவருடைய 50வது படமாக உருவாகி உள்ளது மஹா திரைப்படம். நடிகர் ஸ்ரீகாந்த் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்க இந்த படத்தில் சிம்பு ஜமீல் என்ற சிறப்பு தோற்றத்தில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .