படுகர் திருமணம்.. ஆனந்தக் கண்ணீர்.. சாய் பல்லவி தங்கை பூஜா கண்ணன் வெளியிட்ட புகைப்படங்கள்..
நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணனின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார்
நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணனின் திருமணம், படுகர் இன முறைப்படி, உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. அவரின் எளிமை, அமைதி, அழகு, எதார்த்தமான நடிப்புக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான ரசிகர் கூட்டத்தை பெற்று இருக்கும் சாய் பல்லவி ஒரு தேர்ந்த டான்சர். 'ரவுடி பேபி...' பாடலுக்கு அவர் நடனமாடியதே அதற்கு சாட்சி. அவருடைய தங்கை பூஜா கண்ணன் திருமண கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு வினீத்துடன் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அவர்களின் திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்கள் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது தனது தங்கை பூஜா கண்ணனுடன் சேர்ந்து சாய் பல்லவி மிகவும் பிரபலமான மராட்டி பாடலான 'அப்சரா ஆலி' பாடலுக்கு மிகவும் உற்சாகத்துடன் மயக்கும் ஸ்டெப்ஸ் போட்டு நடனமாடிய முழு வீடியோவையும் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்தது சாய் பல்லவி ரசிகர் பக்கம்.
இந்த வீடியோ ட்ரெண்டிங்காகி வருவதுடன் ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்தது.
ரன்பீர் கபூர் நடிக்கும் 'ராமாயணம்' படத்தில் சீதா தேவியாக நடிக்கிறார் நடிகை சாய் பல்லவி. இதில் சன்னி தியோல் ஹனுமானாகவும், ராவணனாக யஷும் நடிக்க பாபி தியோல் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் கும்பகர்ணனாகவும், விபாஷணனாகவும் நடிக்க உள்ளனர் என கூறப்படுகிறது. இந்த ராமாயண திரைப்படம் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.