Raghuvaran Death Reason: வில்லன் நடிகர் ரகுவரன் இறப்பு பின்னால் உள்ள மறைக்கப்பட்ட ரகசியம்! அதிர்ச்சி கொடுத்த நடிகர் பப்லு பிரித்திவிராஜ்!
நடிகர் ரகுவரனின் மரணம் குறித்து, தற்போது அவருடைய நண்பரும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலமுமான பப்லு பிரித்திவிராஜ் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் ரகுவரன். தமிழில் கடந்த 1982-ஆம் ஆண்டு வெளியான 'ஏழாவது மனிதன்', திரைப்படத்தின் மூலம், அறிமுகமானார். தமிழ் சினிமாவில் இவருக்கு தொடர்ந்து, குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தன.
சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்த பின்னர், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத நிலையில், மீண்டும் குணச்சித்திரம் மற்றும் வில்லன் ரோலில் நடிக்க துவங்கினார். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதை உள்வாங்கிக் கொண்டு, தனக்கே உரிய பாணியில் சிறப்பாக நடிக்கும் திறன் படைத்தவர் ரகுவரன்.
இவர் நடிப்பில் வெளியான பாட்ஷா, மனிதன், தாய் மேல் ஆணை, அஞ்சலி, காதலன், முத்து, ரட்சகன், அமர்க்களம், யாரடி நீ மோகினி, போன்ற படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத படங்களாகும். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக முதல்வன் படத்தில் நடித்ததற்காக, சிறந்த வில்லன் நடிகருக்கான தமிழக அரசின் விருது ரகுவரனுக்கு கிடைத்தது.
சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் போதே... தனக்கு ஜோடியாக நடித்த நடிகை ரோகினியை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிரிந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
ரகுவரன் - ரோகிணியின் மகன் ரிஷிவரன் தற்போது தன்னுடைய படிப்பை முடித்துவிட்ட நிலையில், விரைவில் சினிமாவில் அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரகுவரன், 2008 ஆம் ஆண்டு தன்னுடைய 49 வயதில் அதிகமான குடிக்கு அடிமையாகி அதனால் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டது. அவர் இறந்து 17 வருடங்கள் ஆகும் நிலையில், இவருடைய நண்பரும்... பிரபல நடிகருமான பப்லு பிரித்திவிராஜ் முதல் முறையாக ரகுவரனின் மரணம் குறித்து கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய பப்லு, " ரகுவரனும் நானும் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். அவரும் - நானும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் இருப்போம். ஆனால் உயரத்தில் மட்டுமே இருவரும் மாற்றங்கள் இருக்கும். அவர் தன்னுடைய விவாகரத்துக்கு பின்னர், குடி பழக்கத்தை தாண்டி போதைக்கு அடிமையாக மாறினார்.
அவரை திருத்துவதற்காக நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் ஆனால் முடியாமல் போனது. அவர் முழுக்க முழுக்க போதை மருந்துக்கு அடிமையானதால் சில நாட்களிலேயே, அவருடைய மூளையில் இருக்கும் நினைவு பகுதி செயல் இழக்கும் நிலைக்கு சென்றது. அதுதான் அவருடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணம் எனக் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















