மேலும் அறிய

WPL 2026 Final RCB vs DC: புதிய சாம்பியன் ஆர்சிபியா? டெல்லியா? இன்று நடக்கிறது இறுதிப்போட்டி!

மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் புதிய சாம்பியன் யார்? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் ஆர்சிபி - டெல்லி அணிகள் மோதுகின்றனர்.

ஆண்கள் கிரிக்கெட் வீரர்களுக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது போல, மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்காக டபுள்யூபிஎல் கிரிக்கெட் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு 5வது சீசன் நடந்து வருகிறது. 

டபுள்யூபிஎல் சாம்பியன் யார்?

இந்த சீசன் இன்று இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. இன்று சாம்பியன் யார்? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஒரு முறை சாம்பியன் பட்டம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், முதன்முறை சாம்பியன் பட்டம் கைப்பற்றத் துடிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் இந்த இறுதிப்போட்டியில் மோத உள்ளது. 


WPL 2026 Final RCB vs DC: புதிய சாம்பியன் ஆர்சிபியா? டெல்லியா? இன்று நடக்கிறது இறுதிப்போட்டி!

இந்த இறுதிப்போட்டி இன்று வதோதராவில் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்தத் தொடரைப் பொறுத்தமட்டில் இரு அணிகளும் பலமிகுந்த அணியாகவே உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இரு அணிகளும் வலுவாகவே உள்ளனர். இன்று யார் ஆதிக்கத்தை அதிகம் செலுத்துகிறார்களோ? அவர்களுக்கே சாம்பியன் மகுடம் கிடைக்கும்.

மிரட்டும் பேட்டிங்:

ஆர்சிபி அணியைப் பொறுத்தமட்டில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, கிரேஸ் ஹாரிஸ் சிறந்த தொடக்கத்தை அளித்தால் டெல்லிக்கு கடும் சவால் நேரிடும். ஜார்ஜியா வோல் அதிரடி காட்டினால் பக்கபலமாக அமையும். நாடின் டி கிளார்க் அதிரடி காட்ட வேண்டியது அவசியம் ஆகும். தயாளன் ஹேமலதாவும் அதிரடி காட்டினால் ஆர்சிபிக்கு பெரும் பலமாகும். பின்வரிசையில் பக்கபலமாக இருப்பவர் ரிச்சா கோஷ்.  ராதா யாதவ்வும் பேட்டிங்கில் அசத்தினால் ஆர்சிபி இமாலய இலக்கை எட்டிப்பிடிக்கும். 

டெல்லி அணியைப் பொறுத்தமட்டில் கடைசியாக ஆடிய 2 போட்டியிலும் சேசிங்கில் அசத்தி வெற்றி பெற்றனர். அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் லிஸ்லி லீ - ஷபாலி வர்மா அதிரடியாக ஆடக்கூடியவர்கள் இவர்கள் அதிரடி காட்ட வேண்டியது அவசியம். லாரா வோல்வார்ட் கடந்த போட்டியில் நிலைத்து நின்று ஆடியது போல, இந்த போட்டியிலும் ஆடினால் டெல்லிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். டெல்லியின் மிகப்பெரிய பலமாக இருப்பது கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ். குறிப்பாக, சேசிங்கில் அசத்தி வருகிறார். இதனால், இவரது பேட்டிங் மீது இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாரிசான் கேப்பும் அதிரடியாக ஆடினால் டெல்லி ஆர்சிபிக்கு சவால் அளிக்கும். 

சவால் தரும் பந்துவீச்சு:

இன்றைய போட்டியைப் பொறுத்தமட்டில் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் அணிக்கே கோப்பை என்பது உறுதியாகும். ஆர்சிபி அணியைப் பொறுத்தமட்டில் லாரன் பெல், சயாலி சத்கரே, அருந்ததி, ஸ்ரேயங்கா, ராதா ஆகியோர் உள்ளனர். மிகப்பெரிய நம்பிக்கையாக லாரன் பெல் உள்ளார். அவர் இந்த சீசனில் ஆர்சிபியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 


WPL 2026 Final RCB vs DC: புதிய சாம்பியன் ஆர்சிபியா? டெல்லியா? இன்று நடக்கிறது இறுதிப்போட்டி!

அதேபோல, டெல்லி அணியும் பந்துவீச்சில் சவால் அளிக்கும் விதமாக உள்ளது. சின்லி ஹென்றி, மாரிசன் கேப், சினேகா ராணா, ஸ்ரீசரணி, நந்தினி சர்மா, லூசி ஹேமில்டன் என பெரிய பட்டாளமே உள்ளனர். சின்லி ஹென்றி பந்துவீச்சு மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

பெரும் எதிர்பார்ப்பு:

இரு அணியும் சரிசம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த 2 போட்டியிலும் சேசிங் செய்த அணியே வெற்றி பெற்றது. ஆனாலும், இறுதிப்போட்டி என்பதால் சேசிங்கும் அழுத்தம் மிகுந்ததாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. இன்று நடக்கும் இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஹாட்ஸ்டாரில் ஓடிடியில் இதைக் காணலாம். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் காணலாம். ஆர்சிபி அணி ஏற்கனவே ஒரு முறை டெல்லிக்கு எதிராக ஆடிதான் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
"மோடி நடவடிக்கை எடுப்பார்.. மாணவர்கள் வீட்டுக்கு போங்க.." சல்மான்கான் அட்வைஸ்

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Chennai Power Cut: சென்னைல ஜூலை 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்த லிஸ்ட்ட பாருங்க
சென்னைல ஜூலை 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்த லிஸ்ட்ட பாருங்க
Minister Jegatheeswari: “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
“என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
Embed widget