மேலும் அறிய

UPSC Notification: 933 பணியிடங்கள்.. IAS, IPS, IFS பதவிகள் - எப்படி விண்ணப்பிக்கலாம்? தகுதிகள், தேதி, தேர்வு விவரங்கள்

UPSC CSE Notification: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 933 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம், தேர்வு தேதி உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

UPSC CSE Notification: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணியிடங்களுக்கான தகுதிகள், தேர்வுகள் உள்ளிட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மத்திய அரசில் 933 காலி பணியிடங்கள்:

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் இந்திய வன சேவை உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பினை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில் எப்போதிலிருந்து விண்ணப்பிக்கலாம் என்பது தொடர்பான விவரங்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் பிப்ரவரி 24ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த நடைமுறையானது மொத்தம் காலியாக உள்ள 933 பணியிடங்களை நிரப்புவதற்கானது என யுபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதுபோக விண்ணபிக்கும் முறை, தகுதி வரம்புகள், தேர்வு பட்டியல் தொடர்பான விவரங்களும் வெளியாகியுள்ளன. அவற்றின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

யுபிஎஸ்சி தேர்வு - கட்டாயம் அறிய வேண்டிய விவரங்கள்

யுபிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

முதல்நிலை தேர்வு: வரும் மே 24ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

முதன்மை தேர்வு: ஆகஸ்ட் 21ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

வயது தகுதிக்கான கட்-ஆஃப்: வயது தகுதியை நிர்ணயிப்பதற்கான கட்-ஆஃப் தேதி ஆகஸ்ட் 1, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது

யுபிஎஸ்சி தேர்வுக்கான தகுதிகள்

விண்ணப்பக் கட்டணம்

  • பொது, ஒபிசி மற்று பொருளாதாரா ரீதியாக நலிவடைந்த பிரிவை சேர்ந்தோர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்
  • எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மகளிர் விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை
  • மாற்றுதிறனாளிகளும் விண்ணப்பக் கட்டணம் எதையும் செலுத்த வேண்டியதில்லை

கல்விக் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கல்லைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

21 முதல் 32 வயதுடைய நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதில் தளர்வும் வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகுங்கள்

தேர்வு செய்யப்படுவது எப்படி?

  • தேர்வு நடைமுறையான முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் உடல்நிலை தகுதி என பல படிநிலைகளை கொண்டுள்ளது
  • வெற்றிகரமாக பதிவுசெய்த விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கு முந்தைய வாரத்தின் கடைசி வேலை நாளில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து E-அட்மிட் கார்டை டவுன் -லோட் செய்யலாம்
  • தேர்வுக்கு ஏழு நாட்களுக்கு முன்பு வரை எழுத்தர் மாற்றத்தை கோரும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு மின்-அனுமதி அட்டை வழங்கப்படும்.

யுபிஎஸ்சி தேர்வு - விண்ணப்பிப்பது எப்படி?

  • தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் upsconline.nic.in என்ற இணைய முகவரியை அணுகவும்
  • பதிவு நடைமுறையை பூர்த்தி செய்யுங்கள்
  • தனிப்பட்ட, கல்வி மற்றும் தகவல் தொடர்பு தொடர்பான விவரங்களை உள்ளீடு செய்யுங்கள்
  • தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள், கையொப்ப விவரங்களை அப்லோட் செய்யுங்கள்
  • ஆன்லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்
  • ஆவணத்தை சப்மிட் செய்து, உறுதிப்படுத்தப்பட்ட பக்கத்தை சேமித்து வையுங்கள்

யார் யுபிஎஸ்சி எத்தனை முறை தேர்வு எழுதலாம்?

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வினை எழுத, பொதுப்பிரிவினருக்கு ஆறு முறை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அதேநேரம் ஒபிசி மற்றும் பொருளாதாரா ரீதியாக நலிவடைந்தபிரிவினர் 9 முறை தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் குறிப்பிட்ட வயது வரம்பை அடையும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் யுபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.

Frequently Asked Questions

யுபிஎஸ்சி அறிவிப்பின்படி, விண்ணப்பிக்க கடைசி தேதி எது?

யுபிஎஸ்சி அறிவிப்பின்படி, பிப்ரவரி 24ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு எப்போது நடைபெறும்?

முதல்நிலை தேர்வு மே 24ஆம் தேதி நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க என்ன கல்வித் தகுதி தேவை?

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினருக்கு யுபிஎஸ்சி தேர்வு எழுத எத்தனை வாய்ப்புகள் உள்ளன?

பொதுப் பிரிவினருக்கு ஆறு முறை யுபிஎஸ்சி தேர்வு எழுத வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget