மேலும் அறிய

Volkswagen Tayron: 7 சீட்டருக்கான முன்பதிவை தொடங்கிய ஃபோக்ஸ்வாகன் - விலை என்ன? யாருடன் போட்டி? கார் எப்படி?

Volkswagen Tayron 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய 7 சீட்டரான டெய்ரான் கார் மாடலுக்கான முன்பதிவை, ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தொடங்கியுள்ளது.

Volkswagen Tayron 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய 7 சீட்டரான டெய்ரான் கார் மாடல் பிப்ரவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஃபோக்ஸ்வாகன் டெய்ரான் முன்பதிவு தொடங்கியாச்சு..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2026ம் ஆண்டிற்கான தனது பயணத்தை, ஃபோக்ஸ்வாகன் மிகவும் தீவிரமாகவே தொடங்கியுள்ளது. அதன்படி, முற்றிலும் புதிய டெய்ரான் R-லைன் கார் மாடலுக்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் சந்தைப்படுத்தப்படும் என உறுதிப்படுத்தப்பட்டாலும், அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் விருப்பமுள்ள பயனர்கள் 51 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, இந்த ப்ரீமியம் 7 சீட்டர் எஸ்யுவிக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். ப்ராண்டின் அதிகாரப்பூர்வ விற்பனை நிலையங்களில் மட்டுமின்றி, அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளங்களை அணுகியும் முன்பதிவை மேற்கொள்ளலாம்.

ஃபோக்ஸ்வாகன் டெய்ரான் - விலை, போட்டியாளர்கள்:

பெரிய இடவசதி மற்றும் அதிகப்படியான வசதிகள் & அம்சங்களை கொண்டு, செயல்திறன் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள, குடும்ப பயன்பாட்டிற்கான இந்த எஸ்யுவி ஆனது, உள்ளூரிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது. இதன் விளைவாக இந்த காருக்கு ஃபோக்ஸ்வாகன் போட்டித்தன்மையுடன் கூடிய விலையை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ரூ.45 லட்சம் என்ற தொடக்க விலையுடன் உள்ளூரில், டொயோட்டா ஃபார்ட்சுனர், ஸ்கோடா கோடியாக், எம்ஜி க்ளோஸ்டர், ஜீப் மெரிடியன் மற்றும் எம்ஜி மெஜஸ்டர் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. 

Volkswagen Tayron: 7 சீட்டருக்கான முன்பதிவை தொடங்கிய ஃபோக்ஸ்வாகன் - விலை என்ன? யாருடன் போட்டி? கார் எப்படி?

ஃபோக்ஸ்வாகன் டெய்ரான் - காரை ப்ரீமியமாக்கும் டிசைன்

டிசைன் அடிப்படையில் புதிய டெய்ரான் காரானது, முதல் பார்வையிலேயே கவனத்தை ஈர்க்கிறது. இதற்கு HD மேட்ரிக்ஸ் எல்இடி முகப்பு விளக்குகள் உடன் கூடிய IQ லைட்கள், பம்பர் மற்றும் முன்புற கதவுகளில் ஸ்போர்ட்டி ஆர்-லைன் டிசைன் எலிமெண்ட்கள் இடம்பெற்று இருப்பது ஆகியவை காரணமாகின்றன. 19 இன்ச் காவெண்ட்ரி அலாய் வீல்கள் உடன் முன் மற்றும் பின்பக்கத்தில் ஒளிரக்கூடிய ஃபோக்ஸ்வாகன் லோகோக்களும் இடம்பெற்றுள்ளன. 

உட்புற அம்சங்களை கவனித்தால், பனோரமிக் சன்ரூஃப், எர்கோனோமிக் சீட்டிங் மற்றும் இந்த பிரிவில் உள்ள கார்களில் முதலமுறையாக 15 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை டெய்ரானை ப்ரீமியமாக மாற்றுகிறது. இதற்கு உறுதுணையாக 10.25 இன்ச் டிஜிட்டல் காக்பிட், ஆகுமெண்டர் ரியாலிட்டி டிஜிட்டல் டிஸ்பிளே, மெமரி ஃபங்க்சனுடன் கூடிய 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய எலெக்ட்ரிகல் சீட், வெண்டிலேஷன்,மசாஜ் மற்றும் லம்பர் சப்போர்டும் வழங்கப்பட்டுள்ளது. 30 வண்ணங்களாலான ஆம்பியண்ட் லைட்டிங்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Volkswagen Tayron: 7 சீட்டருக்கான முன்பதிவை தொடங்கிய ஃபோக்ஸ்வாகன் - விலை என்ன? யாருடன் போட்டி? கார் எப்படி?

ஃபோக்ஸ்வாகன் டெய்ரான் - பாதுகாப்பு அம்சங்கள்:

ப்ரீமியம் அம்சங்கள் மட்டுமின்றி பாதுகாப்பு வசதிகளும் இன்றைய தேதிக்கு பயனர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கு ஈடாக, நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ட்ரைவர் அசிஸ்டன்ஸ் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. 9 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் அசெண்ட் & டிசெண்ட் கன்ட்ரோல், 14 மேம்படுத்தப்பட்ட ட்ரைவர் அசிஸ்ட் வசதிகளுடன் கூடிய லெவல் 2 ADAS ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. சூழலுக்கு ஏற்ப இயக்கும் வகையில் பலதரப்பட்ட ட்ரைவிங் மோட்களும் இடம்பெற்றுள்ளன.

Volkswagen Tayron: 7 சீட்டருக்கான முன்பதிவை தொடங்கிய ஃபோக்ஸ்வாகன் - விலை என்ன? யாருடன் போட்டி? கார் எப்படி?

ஃபோக்ஸ்வாகன் டெய்ரான் - இன்ஜின் விவரங்கள்

டெய்ரானுக்கான ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக ஃபோக்ஸ்வாகன் இதில் 2.0 லிட்டர் TSI EA888 evo4 பெட்ரோல் இன்ஜினை பொருத்தியுள்ளது. இது 204PS மற்றும் 320Nm அற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. 7 ஸ்பீட் DSG ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டிருப்பதோடு,  4MOTION ஆல் வீல் ட்ரைவ் வசதியையும் கொண்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 7.3 விநாடிகளில் எட்டும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 224 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டால்பின் க்ரே மெடாலிக் மற்றும் நைட் ஷேட் ப்ளூ மெட்டாலிக் உட்பட மொத்தம் 7 வெளிப்புற வண்ண விருப்பங்களில், பயனர்கள் ஃபோக்ஸ்வாகனின் டெய்ரான் ஆர்-லைனை தேர்வு செய்யலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக
13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
”ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது.!” காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Pattimandram Raja: செட்டியாரா? செட்டிநாடா? போஸ்டால் வெடித்த சர்ச்சை - பட்டிமன்றம் ராஜா கொடுத்த விளக்கம்
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
Sierra Vs Seltos: ஹைப் ஏத்தி மொக்கை வாங்கிய சியாரா..! சிம்பிளா சம்பவம் செய்த செல்டோஸ் - கியா சாதித்தது எப்படி?
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
DMK: வெயிட்டிங் ஓவர்..! பிப். 22 முதல் அறிவாலயத்துக்கு வாங்க - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - திமுக அறிவிப்பு
Toyota Urban Cruiser Ebella Review: டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா எப்படி இருக்கு.? பிடித்தவை, பிடிக்காதவை என்ன.? விமர்சனம் இதோ
டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா எப்படி இருக்கு.? பிடித்தவை, பிடிக்காதவை என்ன.? விமர்சனம் இதோ
Taigun vs Creta Vs Seltos: ஹுண்டாய் க்ரெட்டா VS கியா செல்டோஸ் VS ஃபோக்ஸ்வாகன் டைகுன்; மிட் சைஸ் SUV-ல் எது பெஸ்ட்.?
ஹுண்டாய் க்ரெட்டா VS கியா செல்டோஸ் VS ஃபோக்ஸ்வாகன் டைகுன்; மிட் சைஸ் SUV-ல் எது பெஸ்ட்.?
Embed widget