Baba Re Release : ரஜினி சினிமாட்டிக் யூனிவர்ஸ்.. அட்டர் ஃப்ளாப் ஆன பாபா படம்; காரணம் தெரியுமா?
லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்திற்கு முன்பே 2002-ல் வெளியான பாபா படத்தில், அன்றே சினிமாட்டிக் யூனிவர்ஸ் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பாபா படம் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி வரும் டிசம்பர் 12 ஆம் தேதி மீண்டும் வெளியாகவுள்ளது. இதனால், பார்க்கும் இடமெல்லாம் ஒரே பாபா படம் மயமாக உள்ளது.அப்படத்தில் இடம்பெற்ற கெத்தான காட்சிகளும், மனதை கவரும் பாடல்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறன. இதையெல்லாம் பார்க்கும் போது, கண்டிப்பாக ரீ-ரிலீஸாகும் பாபா படத்தை பார்த்தே தீரவேண்டும் என சில ரஜினிகாந்த் ரசிகர்களும், பாபா படத்தின் ரசிகர்களும் அவரின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். படத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவ்வப்போது அப்டேட்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பாபா ஏன் ப்ளாப் ஆனது?
2002-ல் இந்த படம் வெளியான போது, ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றதால், அப்போது அது பெரும் சர்ச்சையில் சிக்கியது. படையப்பா, பாட்ஷா என மாஸான படங்களில் நடித்து வந்த ரஜினி, திடீரென ஆன்மிகம் கலந்த கதையில் நடிக்கிறார் என்ற விஷயத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் அப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கற்பனை மிக்க சீன்களை பலரும் லாஜிக் இல்லை என கேலி செய்தனர்.
பாபா படத்தில் இடம்பெற்ற சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட் :
ஹாலிவுட் படத்திற்கு பின்னர், தமிழ் சினிமாவில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்டை, “விக்ரம்” படம் மூலம் கொண்டுவந்தவர் லோகேஷ் கனகராஜ் என தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமையாக பேசிவந்தனர். கைதி படத்தில் இருக்கும் டில்லி என்ற கதாபாத்திரத்தையும், இன்ஸ்பெக்டர் பிஜாய் என்ற கதாபாத்திரத்தையும் மற்றும் இதர கதாபாத்திரங்களையும் விக்ரம் படத்தில் உள் புகுத்திய விதம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது, தமிழ் சினிமாவில் இது போன்ற கற்பனைக்கு பாபா படமே ஆதிமூலமாக அமைந்தது என்பது போல் பாபா படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட காட்சி ஒன்று வைரல் ஆகிவருகிறது.
❤️🔥#LCU is not #Kollywood 's first cinematic universe .It's "Baba"#Baba #narasimha #Rajinikanth𓃵 #ramyakrishnan#BaBaReRelease pic.twitter.com/atwyRBnC3b
— 🅱🆁🅰🅼🅷🅸 🅱🅷🅰🅸 (@bramhi_bhai) November 24, 2022
ரஜினி, அவருக்கு கொடுக்கப்பட்ட 7 மந்திரங்களுள் ஒன்றை, படையப்பா படத்தில் வரும் நீலாம்பரியை வரவழைக்க பயன்படுத்துவார். அப்போது நீலாம்பரியான ரம்யா கிருஷ்ணன் வருவார். இந்த காட்சியில் வேறு ஒரு படத்தில் இருந்து ஒரு கதாபாத்திரம் ஒன்று ஒரு காட்சியில் இடம்பெறுகிறது. இந்த வீடியோவிற்கு , “இதுதான் கோலிவுட்டின் சினிமாட்டிக் யுனிவர்ஸ்” என்ற கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த போது, ஆமா லா.. என்பது போல் இருக்கிறது. அப்போது வெளியான அதே படம்தான் இப்போதும் வெளியாகவுள்ளது. அந்த சமயத்தில், மக்கள் படங்களை பார்க்கும் விதம் வேறு விதமாக இருந்த காரணத்தால், அதனால் அது ப்ளாப் ஆனது. ஆனால், இப்போது, மக்கள் படங்களை விமர்சித்தாலும், அனைத்து வகையான சினிமாவையும், கற்பனைக்கு எட்டா காட்சிகளையும் கதைகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற கருத்தை மறுக்க முடியாது.
புதிய பாபா வெர்ஷன்
பழைய பாபவில் 7 மந்திரங்கள் ரஜினிக்கு கொடுக்கப்பட்டது போல் அமைக்கப்பட்டிருக்கும். இப்போது, சில தவிர்க்கமுடியாத சிக்கல்களால், புதிய பாப வெர்ஷனில் 7 மந்திரங்கள் 5 மந்திரங்களாக குறைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பரவி வருகிறது. அத்துடன் புதிய பாபா வெர்ஷனில், இந்த காலத்தின் டெக்னாலஜியை வைத்து க்ராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருக்கும் நிலையில், பாபா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.