Baakiyalakshmi Serial: சோதனை மேல் சோதனை...பாக்யா எடுத்த அதிரடி முடிவு...ரசிகர்கள் அதிர்ச்சி
செல்வியிடம் செழியன் நடவடிக்கைகள் குறித்து புலம்பும் ஜெனியை அவர் சமாதானப்படுத்துகிறார். அந்நேரம் அங்கு பாக்யா வருகிறார். அப்போது அவருக்கு போன் ஒன்று வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்தை காப்பாற்ற பாக்யா அதிரடி முடிவு ஒன்றை எடுக்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
செழியனிடம் சண்டைப் போட்ட ஜெனி
வீட்டின் கரண்ட் பில் கட்டும் விவகாரம் தொடர்பாக ஜெனிக்கும் செழியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. பணம் தர மறுக்கும் அவரைப் பார்த்து உனக்கும் கோபி அங்கிளுக்கும் வித்தியாசமே இல்லை. நீ இவ்வளவு சுயநலவாதியா இருப்பன்னு நினைக்கவே இல்லை. உங்க அம்மா கஷ்டப்படுறாங்க. அப்ப கூட எனக்கு என்னவோ மாதிரி தானே இருக்க என கடுமையாக ஜெனியை விமர்சிக்கிறார். அங்கிள் பண்ண தப்பை நீயும் பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம் சொல்லு என தெரிவிக்க ஜெனியை அடிக்க கை ஓங்கும் செழியன் பின் பார்த்து பேசுமாறு எச்சரிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து செல்வியிடம் செழியன் நடவடிக்கைகள் குறித்து புலம்பும் ஜெனியை அவர் சமாதானப்படுத்துகிறார். அந்நேரம் அங்கு பாக்யா வருகிறார். அப்போது அவருக்கு போன் ஒன்று வருகிறது. அதில் சமையல் ஆர்டர் எடுத்த கஸ்டமர் ஒருவர் பேசி ஒருவாரமாக சாப்பாடு வரவில்லை என கூறி திட்டுவதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கா சாப்பாடு கொடுங்க.இல்லைன்னா நான் வேற இடம் பார்த்துக்கிறேன் என சொல்கிறார். இனி இப்படி நடக்காது என மன்னிப்பு கேட்டு பாக்யா போனை வைக்கிறார். இதனையடுத்து பாக்யா இனிமேல் கேரியர் சாப்பாடு கொடுப்பது மட்டுமல்லாமல் பெரிய பிசினஸ் ஒன்று மனசுக்கு பிடிச்ச மாதிரி பண்ணனும் என நினைக்கிறார்.
கல்யாண பேச்சால் கடுப்பாகும் அம்ரிதா
எழில் அம்ரிதாவை சந்திக்க அவர் வீட்டுக்கு போகிறார். அங்கு அவரிடம் வீட்டு, படம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து புலம்புகிறார். அம்ரிதா ஆறுதல் சொல்லும் நேரத்தின் வெளியே சென்ற அவரின் பெற்றோர் வீட்டுக்கு வருகின்றனர். பின்னர் அங்கிருந்து எழில் கிளம்பியதும் அம்ரிதாவிடம் எழிலை திருமணம் செய்யும் முடிவு என்ன ஆனது..அவங்க குடும்பத்துல இப்ப நிலைமை சரியில்ல..எழிலுக்கு சரியான பட வாய்ப்பு அமையல என ஏதேதோ கூறி அவரின் மனதை மாற்ற பெற்றோர்கள் முயற்சி செய்கின்றனர். இதனால் அம்ரிதா என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்.
ராதிகாவை சந்திக்கும் கோபி
கோபியை வீட்டுக்கு வர சொல்லி சந்துரு சொல்ல ராதிகா டென்ஷன் ஆகிறார். ராதிகாவிடம் நீ மயூவின் வாழ்க்கையை பாரு..கோபியும் விவாகரத்து பண்ணிட்டு வந்துட்டாரு என சொல்ல ராதிகா தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். அப்போது அங்கு வரும் கோபியிடம் என்ன முடிவு பண்ணிருக்கீங்க என சந்துரு கேட்க, ராதிகாவை எப்படியாவது சம்மதிக்க வைக்கலாம் என கூறுகிறார். உடனே கோபி நீங்க ராதிகாவை சம்மதிக்க வைக்கலாம்ன்னு சொல்றீங்கன்னா.. இத்தனை நாளா நான் பண்ணதுக்கு என்ன அர்த்தம் என கேள்வியெழுப்புகிறார். ஆனால் கோபியுடனான திருமண பேச்சு குறித்து அவரது அம்மாவும், அண்ணனும் பேசுவதில் விருப்பமில்லை என தெரிவிப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.