மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
பாட்டியோட முடிஞ்சுது.. பாக்யராஜ் சாரை பார்த்தேன்.. அழகன் துரை என்ன செய்கிறார்?
குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ராஜேஷ் குமார் இன்று மிகவும் கஷ்டமான ஒரு சூழலில் சினிமாவில் நடித்த சுவடே இல்லாமல் அல்லல்படுகிறார்.
குழந்தை நட்சத்திரங்களாக மிகவும் பிரபலமாக இருந்த பலருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைந்துவிட்டதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. அந்த வகையில் 80ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு சுட்டி பையனாக மம்மூட்டி, பாக்யராஜ், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் ராஜேஷ்குமார்.
'அழகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நான்கு சிறுவர்கள் நடித்து இருப்பார்கள். இன்று மிகவும் பிரபலமான செலிபிரிட்டிகளாக இருக்கும் ராபர்ட் மாஸ்டர், சுஜிதா, விக்ராந்த் உள்ளிட்டோருடன் மற்றுமொரு சிறுவனாக துரை என்ற கேரக்டரில் நடித்திருந்தவர் ராஜேஷ் குமார். "நம்ம வேற வீட்ல பொறந்து இருக்கலாம் டா..." என அவர் அப்படத்தில் பேசும் வசனம் இன்று வரை மீம் கிரியேட்டர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது.
மல்லுவேட்டி மைனர், தாலாட்டு கேக்குதம்மா, கேளடி கண்மணி, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குழந்தை ஆர்டிஸ்டாக கலக்கிய ராஜேஷ் குமார் நடிப்பு பயணம் 10 வயதுடன் முடிந்து விட்டது. அவருடைய பாட்டி தாலாட்டு கேக்குதம்மா, ரோஜா உள்ளிட்ட பாடல் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் மூலம் சினிமா துறையில் நுழைந்த ராஜேஷுக்கு பாட்டியின் இறப்பு சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராஜேஷ் குமார் தான் சினிமாவில் இருந்து வந்த பிறகு அவர் பட்ட கஷ்டங்கள் குறித்து மிகுந்த மனவேதனையுடன் பேசி இருந்தார். அவர் பேசுகையில் பத்து வயசுடன் சினிமா வாழ்க்கை முடிந்தது. சென்னையை விட்டு கோவைக்கு வந்துவிட்டோம். பாட்டி இருந்து இருந்தா என்னோட லைஃப் வேற மாதிரி இருந்து இருக்கும். அதுக்கு அப்புறம் சினிமாவில் நடிக்க நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்போது எனக்கு அந்த வயசும் இல்லை. ஒரு வேலை நான் அவர்களை தொடர்புகொள்ள முயற்சி செய்து இருந்தால் வாய்ப்பு கிடைத்து இருக்கலாம் என தோணும். நடிக்கணும் என்ற ஆசை எல்லாம் இருக்கிறது ஆனா அதெல்லாம் இப்போ நடக்குமா என எனக்குள் ஒரு யோசனை அதனால நானே என்னை தேத்திக்கிட்டேன்.
பாக்யராஜ் சாரை ஒரு முறை தெரிந்தவர் மூலம் போய் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு என்னை ஞாபகம் இருக்காது என நினைச்சேன் ஆனா ஞாபகம் வைத்திருந்தார். பாட்டி பத்தி, கல்யாணம் பத்தி எல்லாம் விசாரிச்சார். கல்யாணம் ஆகாம இருந்திருந்தா சென்னையிலேயே உனக்கு ஒரு வேலை கொடுத்து இருப்பேன். உன்னோட நம்பர் கொடுத்துட்டு போ. உன்னை கூப்பிடுறேன் அப்படின்னு சொன்னார். அதோட அவ்வளவுதான்.
பாக்யராஜ் சாரை போய் பார்த்ததுக்கு காரணமே வாய்ப்பு கிடைக்குமா? என எதிர்பார்த்துதான். ஆனா நான் அவரை சும்மா பார்க்க தான் வந்திருப்பதாக நினைத்து கொண்டார். எனக்கு மீண்டும் நடிக்க ஆசை இருக்கும் என்பது பற்றி அவருக்கு ஐடியாவே இல்லை. எனக்கும் கேட்க கஷ்டமா இருந்துச்சு. அதனால நானும் அமைதியா வந்துட்டேன் என்றார் ராஜேஷ் குமார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion