மேலும் அறிய

Rajinikanth: ராமர் கோவில் திறப்பு விழா - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறாரா? இல்லையா?

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் ஜனவரி 22ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினி கலந்து கொள்வாரா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒட்டு மொத்த நாடும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் போது பாஜக மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. ஆமாம்,  உத்திரபிரதேச அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் ஜனவரி 22ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான ராமர் கோவிலை கட்டி குடமுழுக்கு விழாவினை மிகவும் பிரமாணடமாக நடத்தவுள்ளது. 

அயோத்தி ராமர் கோயில்:

இந்த குடமுழுக்கு விழாவிற்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். அமிதாப் பச்சன், முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் நடிகர்கள் அருண் கோவில் மற்றும் தீபிகா சிக்லியா ஆகியோரும் உள்ளனர். இவர்கள் இருவரும் பழம்பெரும் தொலைக்காட்சி தொடரான ​​ராமாயணத்தில் ராமர் மற்றும் சீதையின் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர்கள். 

 பிரதமர் நரேந்திர மோடி குழ்ந்தை ராமர் சிலையினை கோவில் கருவறைக்கு சுமந்து செல்கின்றார். இது மட்டும் இல்லாமல்  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாபா ராம்தேவ் மற்றும் ரத்தன் டாடா உட்பட 3,000 விவிஐபிகளுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் இயக்கத்தின் போது உயிரிழந்த 50 கரசேவகர்களின் குடும்ப உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன” என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் பிடிஐயிடம் கூறியுள்ளார். 

பிரபலங்களுக்கு அழைப்பு:

இது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்வில் சர்வதேச பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும்  ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தரப்பில் முயற்சி நடந்து வருகிறது. அறக்கட்டளை 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதியை அழைப்பதை நோக்கமாகக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகின்றதாம். 

சிறப்பு விருந்தினர்களாக நீதிபதிகள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், துறவிகள், பாதிரியார்கள், சங்கராச்சாரியார்கள், மதத் தலைவர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றவர்கள் ஆகியோரும் அழைக்கப்படவுள்ளனர். ராமர் கோவில் இயக்கத்தை தங்கள் பணியின் மூலம் ஆதரித்த பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பாஜகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் மிக முக்கிய கேள்வியாக மாறி இருப்பது, சினிமா நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதுதான். ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அவர் கலந்து கொள்வாரா? என்றும் கேள்வி எழுந்துள்ளது. 

அதிநவீன எண்ட்ரி முறை

விழாவிற்கான அதிநவீன எண்ட்ரி முறையை அறக்கட்டளை செயல்படுத்தவுள்ளது.  விவிஐபிகள் பார்-குறியிடப்பட்ட பாஸ்கள் மூலம் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் ஒரு ஒழுங்கான மற்றும் பாதுகாப்பான நிகழ்வை உறுதி செய்ய முடியும் என அறக்கட்டளை கருதுகின்றது.  இந்த நிகழ்விற்காக மத்திய பாஜக அரசும், மாநில பாஜக அரசும் தீவிரமாக தயாராகி வருகின்றது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget