HBD Asin: சஞ்சய் ராமசாமியின் காதலிக்கு 38 வயசாயிடுச்சு! வாயை பிளக்க வைக்கும் அசினின் சொத்து மதிப்பு!
HBD Asin : சினிமாவில் கொடிகட்டி பறந்த சமயத்திலேயே கோடிகளை சம்பாதித்த அசினின் சொத்து மதிப்பு விவரம் அவரின் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் ஷார்ட் பீரியட்டிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்த நடிகைகளில் ஒருவர் நடிகை அசின். கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டதாலேயே நடை உடை பேச்சு என அனைத்திலுமே கேரள மண்ணின் வாசனை வீசிய அசினின் 38வது பிறந்தநாள் இன்று.
சினிமா வாய்ப்பு :
மிகவும் வசதியான ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் நடிப்பின் மீது அவருக்கு இருந்த தீராத காதல் அவரை மாடலிங், விளம்பரம் பக்கம் இழுத்து வந்தது. அதன் மூலம் திரைப்பட வாய்ப்பு கிடைக்கவே அசின் நடிகையானார். முதல் பட வாய்ப்பும் தனது சொந்த மொழி மலையாளத்திலேயே கிடைத்தது.
நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வாகா என படத்தின் மூலம் 2001ம் ஆண்டு திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். பெரிய அளவில் முதல் படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற முடியவில்லை. அடுத்து அவருக்கு கிடைத்த டோலிவுட் வாய்ப்பு மூலம் நாகார்ஜூனா, ரவி தேஜா என டாப் ஹீரோக்களின் ஜோடியாக நடிக்க அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன.
முதல் தமிழ் படம்:
அதைத் தொடர்ந்து தான் அசினுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. உள்ளம் கேட்குமே திரைப்படம் தான் அசின் நடித்த முதல் தமிழ் படம் என்றாலும் அப்படம் சில காரணங்களால் வெளியாவதில் தாமதம் ஏற்பட, முதலில் அசினை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து M. குமரன் S/O மகாலட்சுமி திரைப்படம் தான். முதல் படத்திலேயே ரசிகர்களை மலபார் என சுத்த வைத்தார்.
தொடர் வெற்றி:
முதல் படமே அசத்தலான வெற்றி படமாக அமைந்ததால் அதனை தொடர்ந்து கஜினி, சிவகாசி, மஜா, உள்ளம் கேட்குமே, போக்கிரி, தசாவதாரம், வேல் என தொடர் வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் ஆனார் அசின். இரண்டே ஆண்டுகளில் உச்சம் தோட்ட நடிகையாக வளம் வந்த அசினுக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வரவே அங்கு சென்று அக்ஷய் குமார், சல்மான் கான், அஜய் தேவ்கான் என ஸ்டார் நடிகர்களின் ஜோடியானார். காவலன் தான் அசின் தமிழில் நடித்த கடைசி திரைப்படம். தமிழிலில் ரஜினிகாந்த் தவிர கமல், விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.
குடும்ப தலைவி:
ஸ்டார் நடிகையாக இருக்கும் போதே தனது காதலரை 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனிக்க துவங்கினார். சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் அசின் சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார்.
அசின் சொத்து மதிப்பு:
அசின் 38வது பிறந்தநாளான இன்று அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. தற்போது குடும்ப தலைவியாக இருந்தாலும் அவரை சினிமாவில் கொடிகட்டி பறந்த சமயத்திலேயே கோடிகளை சம்பாதித்துவிட்டார். ஆடி கியூ 7 , பென்ஸ் என சொகுசு கார்களுக்கு சொந்தக்காரியான அசின் தற்போது கணவரின் பிசினஸை கவனித்து வருகிறாராம். அசின் மட்டுமே சம்பாதித்த சொத்தின் மதிப்பு மட்டுமே ரூபாய் 117 கோடி என்ற தகவல் அவரின் பிறந்தநாள் அன்று வெளியாகியுள்ளது.