மேலும் அறிய

A.R. Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீது பண மோசடி புகார் - நடந்தது என்ன?

2018ம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாடு நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து முன்பணமாக ரூ. 29.50லட்சம் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

A.R. Rahman complaint: நிகழ்ச்சி நடத்த ரூ.29.50 லட்சம் பணம் பெற்று கொண்டு மோசடி செய்ததாக ஏ.ஆர். ரஹ்மான் மீது மருத்துவர் ஒருவர், சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மறக்குமா நெஞ்சம்:

அண்மையில் சென்னையில் நடந்த ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கப்பவில்லை என புகார் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வழக்குப்பதிவு செய்த போலீசார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சர்ச்சைக்கு தானே பொறுப்பேற்ற ஏ.ஆர். ரஹ்மான் டிக்கெட் பணத்தை திரும்பி கொடுத்து வந்தார். மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பிரச்சனை அடங்குவதற்குள் ஏ.ஆர். ரஹ்மான் மீது மற்றுமொரு புகார் எழுந்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் மீது புகார்:

சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அறுவை சிகிச்சை புணர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பின் சார்பில் அதன் தேசிய மாநாட்டின் செயலாளர் மருத்துவர் விநாயக் செந்தில் அளித்துள்ள புகார் வைரலாகி வருகிறது. அதில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 26 மற்றும் 30ம் தேதிகள் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாடு நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அவருக்கு முன்பணமாக ரூ. 29.50 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

ஆனால், தமிழக அரசின் அனுமதி பெறாததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதுடன், ஏ.ஆர். ரஹ்மான் தரப்பிலும் முன்பணம் திரும்ப கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பிலும் முன் தேதியிட்ட காசோலை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ள மருத்துவர், அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாதது தெரிய வந்தது என்றார். மேலும், இது தொடர்பாக பலமுறை ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது உதவியாளர் செந்தில் வேலவனை அணுகிய போது எந்த பதிலும் அளிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பணமும் திரும்ப தரவில்லை என கூறியதுடன் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இசை நிகழ்ச்சி குளறுபடியை தொடர்ந்து, மருத்துவர்கள் அளித்துள்ள புகார் ஏ.ஆர். ரஹ்மானிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்கர் நாயகன் என புகழப்படும் ஏ.ஆர். ரஹ்மான் பண மோசடி புகாரில் சிக்கியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

மேலும் படிக்க: Swathi Reddy: மேடையில் பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை சுவாதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Actor Vijay on Jawan: ஜவான் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன விஜய் - தீயாய் பரவும் ட்விட்டர் பதிவு

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget