Por Thozhil First Look: அசோக் செல்வன் - சரத்குமார் இணையும் 'போர் தொழில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தில் நிகிலா விமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அசோக் செல்வன், சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
போர் தொழில்:
E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், 'போர் தொழில்' எனும் திரைப்படத்தினைத் தயாரித்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியீட்டுத் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தத் திரைப்படம் வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் இப்படத்தில் காவலர்களாக நடித்திருக்கும் அசோக் செல்வன், சரத்குமார் ஆகியோரது வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
புலனாய்வு திரைப்படம்:
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தில் நிகிலா விமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரின் கதையாக அமைந்துள்ளது. இதில் இளம் காவலர், மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். ஆக்சன், சஸ்பென்ஸ் என விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் தயாராகியுள்ளது.
Happy to share the first look of #PorThozhil.
— VijaySethupathi (@VijaySethuOffl) May 17, 2023
Congrats @realsarathkumar sir @AshokSelvan & team.@ApplauseSocial #E4Experiments @epriusstudio @nairsameer @deepaksegal @e4echennai @cvsarathi @vigneshraja89 @nikhilavimal1 @imalfredprakash @prasoon_garg @sunil_chainani @devnidhib… pic.twitter.com/gOHdC6tpfj
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் என்பது இணைய தொடர்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் அனிமேஷன் எனப்படும் சித்திரப் படங்களைக் கொண்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதில் ஒரு முன்னணி நிறுவனம் மற்றும் படைப்புத்திறன் மிகுந்த அரங்கத்தையும் கொண்டது.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு முயற்சியாக தொடங்கப்பட்டிருக்கும் இந்நிறுவனத்திற்கு, பொழுதுபோக்கு துறையில் அனுபவசாலியான சமீர் நாயர் தலைமை ஏற்றிருக்கிறார். 'ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ்' , 'மித்யா', கிரிமினல் ஜஸ்டிஸ் , ஸ்கேம் 1992 : தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி' போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிட்டுள்ளது.
மேலும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- 'நெட்ப்ளிக்ஸ்', 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்', 'அமேசான் பிரைம் வீடியோ', 'சோனி லைவ்', 'எம் எக்ஸ் பிளேயர்', 'ஜீ 5 'மற்றும் 'வூத் செலக்ட்' போன்ற முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களுடனும் கூட்டணி அமைத்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம்:
எப்ரியஸ் ஸ்டுடியோ எல் எல் பி ஒரு ஸ்டார்ட் அப் புரொடக்ஷன் ஸ்டூடியோ. ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஒரு முதலீட்டு வங்கியாளருடன் கடந்த ஆண்டுகளில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.
அதேபோல், E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் நிறுவனம், துல்கர் சல்மான் நடிப்பில் சமீர் தய்யார் இயக்கிய 'NAPKCB', பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்த 'கோதா', மலையாளத்தில் ஜெய் கிரிஷ் இயக்கத்தில் பிருதிவிராஜ் சுகுமாரன் நடித்த 'எஸ்ரா' மற்றும் தமிழில் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமான 'ஆதித்யா வர்மா' உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

