22 ஆண்டுகளாக ஞானபீட விருது வழங்கப்படாமல் தமிழ் புறக்கணிப்பு - வைரமுத்து கவலை
கடந்த 22 ஆண்டுகளாக ஞான பீட விருது வழங்கப்படாமல் தமிழை புறக்கணித்து வருவதாக கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.
இலக்கிய ஆளுமைகளுக்காக இந்தியாவில் வழங்கப்படும் பெரும் அங்கீகாரமான ஞானபீட விருது, கடந்த 22 ஆண்டுகளாக தமிழை தவிர்த்து வருவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஞான பீட விருது:
உருது கவிஞரும், இந்தி சினிமா பாடலாசிரியருமான குல்சார் மற்றும் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராம்பத்ரச்சார்யா ஆகியோருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீட தேர்வுக்குழு வெளியிட்ட அறிவிப்பினை அடுத்து, இலக்கிய ஆளுமைகள் இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
கவிஞர் வைரமுத்துவும் தனது வாழ்த்தினை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விருது பெற்ற கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், என பன்முகம் கொண்ட குல்சாருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்கள் பலவற்றில், தமிழில் வைரமுத்துவும், இந்தியில் குல்சாரும் பாடல் வரிகளை எழுதிய நிலையில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். இதை தனது வரிகளில் நினைவு கூர்ந்துள்ளார்.
தமிழ் மொழி புறக்கணிப்பு:
கூடவே, ஞானபீட விருது கடந்த 22 ஆண்டுகளாக தமிழை புறக்கணித்து இருப்பது குறித்தும் வைரமுத்து அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, ”சமஸ்கிருத மொழிக்காக சமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும் உருது மொழிக்காக இலக்கிய ஆளுமை குல்சாரும் இந்த ஆண்டு ஞானபீட விருதைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி தருகிறது.
இரு பேராளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீடம் தமிழ்மொழியை 22ஆண்டுகள் தவிர்த்தே வருவது தற்செயலானதன்று என்று தமிழ்ச் சமூகம் கவலையுறுகிறது முழுத் தகுதிகொண்ட முதிர்ந்த பல படைப்பாளிகள் காலத்தால் உதிர்ந்தே போயிருக்கிறார்கள் வேண்டிப் பெறுகிற இடத்தில் தமிழ் இல்லையென்ற போதிலும் தூண்டிவிடுவது கடமையாகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமஸ்கிருத மொழிக்காக
— வைரமுத்து (@Vairamuthu) February 18, 2024
சமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும்
உருது மொழிக்காக
இலக்கிய ஆளுமை குல்சாரும்
இந்த ஆண்டு ஞானபீட விருதைப்
பகிர்ந்துகொள்வது
மகிழ்ச்சி தருகிறது
இரு பேராளுமைகளுக்கும்
வாழ்த்துக்கள்
ஜெயகாந்தனுக்குப் பிறகு
ஞானபீடம்
தமிழ்மொழியை 22ஆண்டுகள்
தவிர்த்தே வருவது
தற்செயலானதன்று… pic.twitter.com/YLlP2kqykk
மேலும் படிக்க
Rashmika Mandana: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?
Shaktimaan: அட... சக்திமானாக ரன்வீர் சிங்! கைகோர்க்கும் மின்னல் முரளி இயக்குநர்? வேற லெவல் தகவல்!