மேலும் அறிய

Yuvan Shankar Raja : 30 ஆயிரம் ரசிகர்களின் குரலில் ஒலித்த U1 பாடல்கள்......மைதானத்தை அதிர வைத்த யுவன் ஷங்கர் ராஜா

சென்னையில் நடந்து முடிந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி இதுவரை நடந்த நிகழ்ச்சிகளைவிட மிக சிறப்பானதாக நடந்து முடிந்தது

சென்னை (05.08.2023) ஒய்.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் கான்சர்ட்டில் மொத்தம் 30,000 ரசிகர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம்,   சென்னையில் நிகழ்ந்த இசை நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்கள் பெற்ற நிகழ்ச்சியாக இது கருதப்படுகிறது

லிட்டில் மேஸ்ட்ரோ

Yuvan Shankar Raja :  30 ஆயிரம் ரசிகர்களின்  குரலில் ஒலித்த U1 பாடல்கள்......மைதானத்தை அதிர வைத்த யுவன் ஷங்கர் ராஜா

சினிமா துறையில் என்றுமே இசை அமைப்பாளர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இந்த வரிசையில் Little Maestro என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று (5.8.2023) சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் ஹரிஹரன் , ஆண்ட்ரியா, ராகுல் நம்பியார், பிரேம்ஜி, ரஞ்சித், திவாகர், எம் சீ சனா, மதிச்சியம் பாலா, விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா, சிவாங்கி, பிரியங்கா என்று பலரும் கலந்து கொண்டு பாடல்களை பாடினர்.

30,000 ரசிகர்கள்

Yuvan Shankar Raja :  30 ஆயிரம் ரசிகர்களின்  குரலில் ஒலித்த U1 பாடல்கள்......மைதானத்தை அதிர வைத்த யுவன் ஷங்கர் ராஜா

இந்நிகழ்ச்சியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரில் கண்டு களித்தனர். சென்னையில் சமீப காலங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு ருசிகர நிகழ்வாக மேடையில் விழா அமைப்பாளர்களான Noise and Grains நிறுவனம் மற்றும் விளம்பரதாரர்கள், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஒரு இரு சக்கர வாகனத்தை பரிசளித்தனர், அதை அவர் அவருடைய ரசிகர் ஒருவருக்கு மேடையிலேயே பரிசாக வழங்கினார்.

யுவன் ஷங்கர் ராஜா

Yuvan Shankar Raja :  30 ஆயிரம் ரசிகர்களின்  குரலில் ஒலித்த U1 பாடல்கள்......மைதானத்தை அதிர வைத்த யுவன் ஷங்கர் ராஜா

தமிழ் சினிமா உலகில் அசைக்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன்சங்கர் ராஜா. இவர் தனது 16 வயதில் இசையமைப்பாளராக திரை இசை பயணத்தை தொடங்கினார். முதல் சில படங்கள் சரியாக அமையவில்லை. அத்துடன் இவர் இசை மீது பல விமர்சனங்களும் எழுந்தது. எனினும் 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு தீனா, நந்தா, காதல் கொண்டேன் உள்ளிட்ட படங்களில் இவரின் இசை மிகவும் சிறப்பாக அமைந்தது. அதன்பின்பு இவருடைய இசை மீது எழுந்த விமர்சனங்கள் குறைய தொடங்கின. இவரின் பல படங்களின் பாடல்கள் மெகா ஹிட் அடித்தன.

தயாரிப்பாளர்

கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தைப் பிடித்து வரும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் தயாரித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget