மேலும் அறிய

The Goat: தளபதி ரசிகர்களே! இன்னும் 2 நாள்தான்... தி கோட் தயாரிப்பாளர் என்ன சொன்னார்?

The Goat : 'தி கோட்' படத்தின் அப்டேட் எதுவும் ஜூலை மாதம் வெளிவராததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக கூடும் என வதந்திகள் பரவிய நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் பற்றிய தகவல் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர்.

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரம் நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக இறங்குவதற்கு முன்னர் வெளியாக இருக்கும் படம் 'தி கோட்' என்பதால் திரை ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு என்பது இதுவரையில் விஜய் படங்களுக்கு இருந்ததை காட்டிலும் பல மடங்காக எகிறி வருகிறது.

தி கோட்:

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் தளபதி 68 திரைப்படம் மிகவும் மும்மரமாக தயாராகி வருகிறது. இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

 

The Goat: தளபதி ரசிகர்களே! இன்னும் 2 நாள்தான்... தி கோட் தயாரிப்பாளர் என்ன சொன்னார்?
நடிகர் விஜய் உடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், மோகன், வைபவ், பிரேம்ஜி என மிக பெரிய திரை பட்டாளமே நடித்துள்ள 'தி கோட்' திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் தான் இறுதிக்கட்ட படப்பிடிப்பானது நடைபெற்று முடிந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

'தி கோட்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'விசில் போடு...' மற்றும் இரண்டாவது சிங்கிளாக 'சின்ன சின்ன கண்கள்...' பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கானது. அதை தொடர்ந்து மூன்றாவது பாடல் எப்போது வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

 

 

கடந்த ஜூலை மாதம் முழுவதும் 'தி கோட்' படம் பற்றின எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை மற்றும் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது என வதந்திகள் பரவி வந்ததால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த ரசிகர்களின் தொடர் கேள்விகளுக்கு எனர்ஜி அளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது ஆகஸ்ட் 1ம் தேதி 'தி கோட்' அப்டேட் ஒன்று வெளியாகும் என பதில் அளித்துள்ளார். ஒருவேளை அது மூன்றாவது சிங்கிள் பற்றின அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் யூகிக்கிறார்கள். இன்னும் இரு தினங்களில் 'தி கோட்' குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: பரமேஸ்வரி வீட்டில் மொத்த குடும்பம்.. உள்ளே வர மறுக்கும் சாமுண்டீஸ்வரி! இணையுமா மொத்த குடும்பம்?
Karthigai Deepam: பரமேஸ்வரி வீட்டில் மொத்த குடும்பம்.. உள்ளே வர மறுக்கும் சாமுண்டீஸ்வரி! இணையுமா மொத்த குடும்பம்?
வித்தியாசமான கதைக்களம்... விறுவிறுப்பான திரைக்கதையா? Enemy Of The Smuggler விமர்சனம்!
வித்தியாசமான கதைக்களம்... விறுவிறுப்பான திரைக்கதையா? Enemy Of The Smuggler விமர்சனம்!
Scene Movie Review : சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா...சீன் திரைப்பட விமர்சனம்
Scene Movie Review : சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா...சீன் திரைப்பட விமர்சனம்
சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!
சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
"சினிமா ரீல்ஸ் அரசு: தரம் தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டு" - தவெக அரசு மீது இபிஎஸ் கடும் சாடல்!
காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்! நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்! நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
Embed widget