Archana and Zaara | விஜய் டிவியில் விஜேவாக களமிறங்கும் ஸாரா? இண்ட்ரஸ்டிங் அப்டேட்ஸ்..
அப்படி அவர் பதிவேற்றிய டாய்லட் டூர் வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாக ஷேர் ஆக , அது சோலோ கிரியேட்டர் , கார்பரேட் கிரியேட்டர் என்ற மிகப்பெரிய விவாதத்தையே கிளப்பிவிட்டது.
சின்னத்திரை தொகுப்பாளரான அர்ச்சனா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக அந்த துறையில் ஜொலித்து வருகிறார். காமெடி டைம்ஸ் என்னும் நிகழ்ழ்சி மூலமாக புகழ்பெற்ற அர்ச்சனா, அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். சமீபத்தில் ஸீ தமிழில் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சி ஒன்றில் , தனது முழு ஈடுபாட்டையும் கொடுத்து மீண்டும் இணையத்தில் கவனம் பெற்றார். அதில் கிடைத்த வரவேற்பை வைத்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு அன்னையாக அரவணைக்கப்பட்ட அர்ச்சணா , அடுத்தடுத்த ட்விஸ்டுகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா என அர்ச்சனா சீரியஸாக கேட்டாலும் , அதனை இன்றளவும் பலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
என்னதான் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத அர்ச்சனா , தனது மகள் மற்றும் தங்கையுடன் இணைந்து பாஸிட்டிவாக தனது வாழ்க்கையை கொண்டாடி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மகள் ஸாராவுடன் இணைந்து யூடியூப் பக்கம் ஒன்றை நடத்தி வந்தார். அப்படி அவர் பதிவேற்றிய டாய்லட் டூர் வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாக ஷேர் ஆக , அது சோலோ கிரியேட்டர் , கார்பரேட் கிரியேட்டர் என்ற மிகப்பெரிய விவாதத்தையே கிளப்பிவிட்டது.
View this post on Instagram
அந்த பிரச்சனை ஓய்ந்திருந்த நிலையில் , அர்ச்சனா மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்தார். பின்னர் மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கினார். இந்த நிலையில் மகள் ஸாராவுடன் , அர்ச்சனா மற்றும் ஜாக்லின் இருவரும் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதன் மூலம் அர்ச்சனா மற்றும் ஸாரா இருவரும் விஜய் டிவில் நிகழ்ச்சி எதையும் தொகுத்து வழங்குகிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸாராவும் அர்ச்சனாவும் ஸீ தமிழில் சூப்பர் மாம் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதிலேயே தொகுப்பாளாராக களமிறங்கியுள்ள ஸாரா, முன்னதாக டாக்டர் படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram