Anushka Shetty : அனுஷ்கா இப்படியும் நடிப்பாரா !...காட்டி படத்தின் மிரட்டும் முன்னோட்டம்
Ghatti movie glimpse : அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள காட்டி படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
அனுஷ்கா ஷெட்டி
தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. சுந்தர் சி இயக்கிய ரெண்டு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானர் அனுஷ்கா. விஜயின் வேட்டைக்காரன் , சூர்யாவின் சிங்கம் ஆகிய இரு படங்கள் அனுஷ்காவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய மார்கெட் ஏற்படுத்திய படங்கள். தமிழைக் காட்டிலும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார் அனுஷ்கா. அவரது கரியரரை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக அமைந்தது பாகுபலி முதல் மற்றும் இரண்டாவது பாகம். இப்படத்திற்கு பின் அவருக்கு பெரியளவில் படவாய்ப்புகள் வரவில்லை. கடந்த ஆண்டும் அனுஷ்கா நடித்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்டம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது அனுஷ்கா நடித்துள்ள புதிய படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
காட்டி க்ளிம்ப்ஸ்
கிரீஸ் ஜாகர்லமூடி இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள புதிய படத்தின் பெயர் காட்டி. கிரீஷ் ஏற்கனவே தெலுங்கில் வேதம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தமிழில் சிம்பு நடித்த வானம் என ரீமேக் செய்யப்பட்டது. காட்டி படத்தின் முன்னோட்ட வீடியோ நேற்று நவம்பர் 7 வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக இதில் அனுஷ்கா இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்களை ஈர்க்கிறார். தலையை வெட்டி அதையை கையில் எடுத்து வருவதும் , புகைபிடித்தபடி கெத்தாக நிற்பதும் என இந்த படத்தில் ஆக்ஷன் மோடில் இறங்கியுள்ளார். இந்த முன்னோட்ட வீடியோவை வைத்து இது பழங்குடி மக்களில் ஒருத்தி அதிகாரத்தை எதிர்த்து போராடும் கதை என்று யூகிக்கலாம். அடுத்த ஆண்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
#AnushkaShetty Starrer #Ghaati FL & Glimpse 🪓
— CineScoop (@Cine_Scoop) November 7, 2024
Female Centric Movie; Beedi Drug mafia victim becomes involved in the trade
Director- #KrishJagarlamudi [Vedam, Vaanam]
Music- #VidyaSagarNagavellipic.twitter.com/APRqGlZ6qz pic.twitter.com/Uiv2B69vRJ
மேலும் படிக்க : Amaran : அமரன் இஸ்லாமியர்களை குற்றப்பரம்பரையாக சித்தரிக்கிறது ..எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம்
Amaran: அமரன் படம் பார்த்து அப்செட்டான இயக்குனர் வசந்தபாலன் - ஏன் என்னாச்சு?