நயன்தாராவ நெட்ஃப்ளிக்ஸ் மதிக்கவே இல்ல...இயக்குநர் அனுராக் கஷ்யப் போட்டு உடைத்த உண்மை
நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்த சேக்ரட் கேம்ஸ் வெப் சீரிஸில் நயன்தாராவை நடிக்க வைக்க பரிந்துரைத்ததாகவும் ஆனால் நெட்ஃப்ளிக்ஸ் நயன்தாராவை ரிஜெக்ட் செய்ததாகவும் தெரியவந்துள்ளது

மூக்குத்தி அம்மன் 2
தன்னை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது பேசுபொருளாகியுள்ளது. இன்று சுந்தர் சி இயகத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய படமாக இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை நயன்தாரா கடந்த ஒரு மாதமாக விரதமிருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சிமேக்ஸ், ஐ.வி. ஓய் என்டர்டெய்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. மார்ச்-15ம் தேதி முதல் ஹூட்டிங் தொடங்குகிறது. பிரசாத் லேபில் பிரம்மாண்ட் செட் அமைகக்ப்பட்டுள்ளது. படத்திற்கான பூஜை நடைப்பெற்றது. குஷ்பு, நடிகர் ஜெயம் ரவி, மீனா, சங்கீதா ஆகியோர் பங்கேற்றனர்.
நயன்தாராவை ரிஜெக்ட் செய்த நெட்ஃப்ளிக்ஸ்
நடிகை நயன்தாராவைப் பற்றிய ஆவணப்படம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸ் இந்த ஆவணப்படத்தை 25 கோடிக்கு நயன்தாரா விற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆவணப்படத்தில் அனுமதி இல்லாமல் காட்சிகள் பயண்படுத்தப் பட்டிருப்பதால் நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நயன்தாரா மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இணைந்து தனுஷூக்கு எதிரான இந்த வழக்கை வாதிட்டு வருகிறார். இன்று நயன்தாராவைக் கொண்டாடும் நெட்ஃப்ளிக்ஸ் தளம் ஒரு காலத்தில் அவரை ரிஜெக்ட் செய்ததாக இயக்குநர் அனுராக் கஷ்யப் தெரிவித்துள்ளார்
"நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்த சேக்ரட் கேம்ஸ் வெப் சீரிஸில் நயன்தாராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அப்போது நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் நிறுவப்படவில்லை. இதனால் அவர்கள் தென் இந்திய ரசிகர்களை பெரிதாக கருதவில்லை. அதனால் நயன்தாராவை அவர்கள் ரிஜெக்ட் செய்தார்கள். சர்வதேச ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக தேர்வு செய்து நடிக்க வைத்தார்கள் " என அனுராக் கஷ்யப் தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் இது தெரியாம நயன்தாரா அவசரப்பட்டு தன் திருமண வீடியோவை நெட்ஃப்ளிக்ஸிடம் கொடுத்துவிட்டாரே என பதிவிட்டு வருகிறார்கள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

