இயக்குனர் சிவா விக்கிபீடியா பக்கத்தில் குசும்பு வேலை: அண்ணாத்த படத்தை கலாய்த்து பதிவு!
பேச்சு பேச்சாய் இருந்தவரை ஓகே... இங்கே சம்பவம் வேறு மாதிரி போய் விட்டது. உலகின் மிகப்பெரிய தேடுதல் களஞ்சியம் எனப்படும் விக்கிபீடியாவில், இயக்குனர் சிவாவின் பக்கத்தை அப்டேட் செய்துள்ளனர்.
அண்ணாத்த படம் வெளியான நாளிலிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்களின் கருத்து வெளிப்பாடு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வலிமை அப்டேட் கேட்டு அவர்கள் செய்த குசும்புகள் நாடறியும். இல்லை இல்லை ... உலகறியும். சினிமாவிற்காக எந்த எல்லையும் செல்வார்கள். நல்ல படங்களை கொண்டாடுவார்கள். பிடிக்காத படங்களை உண்டு இல்லை என ஒரு வழி செய்வார்கள். இது எல்லா படத்திற்கும் பொருந்தும்.
சமீபத்தில் வெளியான அண்ணாத்த படம் வெளியாகும் முன்பே அதன் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியான போதே அதை வைத்து கதை இப்படி தான் என பலவிதமான யூகங்கள் தெரிவிக்கப்பட்டது. படம் வெளியான பிறகு சொல்லவா வேண்டும்... ஆளாளுக்கு புகுந்து விளையாடுகிறார்கள். அண்ணன்-தங்கை செண்டிமெண்ட் படம் என்பது தெளிவாக தெரியும். ஆனால் அதை தங்களுக்கு தெரியந்த அண்ணன்-தங்கை செண்டிமெண்ட் படங்களோடு ஒப்பிட்டு மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர், சிவாவின் முந்தையை படங்களின் கலவை இது என்றும் விமர்சித்து வருகின்றனர்.
சம்பவம் pic.twitter.com/rsIug6Df16
— Stalin Navaneethakrishnan (@stalinABPtamil) November 9, 2021
பேச்சு பேச்சாய் இருந்தவரை ஓகே... இங்கே சம்பவம் வேறு மாதிரி போய் விட்டது. உலகின் மிகப்பெரிய தேடுதல் களஞ்சியம் எனப்படும் விக்கிபீடியாவில், இயக்குனர் சிவாவின் பக்கத்தை அப்டேட் செய்துள்ளனர். அதில் முன்னுரையில் அவரது சுயவிபர குறிப்பில், அவர் சமீபத்தில் எடுத்த அண்ணாத்த படம், அவரது முந்தைய படங்களான சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் படத்தின் கலவை என திருத்தப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவில் யாரோ ஒரு குசும்பர் செய்த வேலை என்பது தெளிவாக தெரிகிறது. அதுவும் ஆங்கில பக்கத்தில் இந்த வேலை நடந்துள்ளது.
யாரோ ஒரு விஷமி தான் இந்த வேலையை பார்த்துள்ளார் என்று தெரிகிறது. விக்கிபீடியாவில் திருத்தம் செய்யும் உரிமை பொதுவாக இருப்பதால், சில நேரங்களில் இது போன்ற தவறுகள் நடக்கிறது. இது புதிதில்லை என்றாலும், அண்ணாத்த தற்போது ட்ரெண்டிங் டாபிக் என்பதால், முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்