மேலும் அறிய

ponniyin selvan: பொன்னியின் செல்வன்... முதல் பாகமும்... இரண்டாம் பாகமும்... முன்னுரை எது? முடிவுரை எது?

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் மற்றும் இராண்டாம் பாகங்களின் முன்னுரை, முடிவுரை பற்றி அலசுகிறது இந்தக்கட்டுரைத்தொகுப்பு

எம்.ஜி.ஆர் தொடங்கி பலரும் திரைப்படமாக்க முயன்று தோற்றுப்போன கல்கியின்  ‘பொன்னியின் செல்வன்’ நாவலை பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுடன் கைகோர்த்து திரைமொழிக்கு மாற்றியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப்படத்தின் ப்ரோமோஷன் சார்ந்த பணிகள்  கடந்த மாதம் தொடங்கிய நிலையில், நேற்று படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல்  வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளியான அந்தப்பாடல் மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி நேற்று சென்னை எக்ஸ்ப்ரஸ் அவன்யூயில் நடந்தது. 

120 நாட்களில் முடிக்கப்பட்ட ஷூட்டிங் 

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ஜெயராம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது படத்தின் குறித்தான ஒரு சின்ன சீக்ரெட்டை சொன்னார் கார்த்தி. அது  ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரு பாகங்களின் ஷூட்டிங்கை இயக்குநர் மணிரத்னம் வெறும் 120 நாட்களில் முடித்து விட்டார் என்றார்.

இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் 120 நாட்களிலேயே முடித்துவிட்டாரா... அப்படியென்றால் படம் எப்படி இருக்கும்.. நன்றாக வந்திருக்குமா..பாகுபலியை  பீட் பண்ணுருமா.. போன்ற கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

இதில் மற்றொரு கேள்வி என்னவென்றால் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் 5 பாகங்களை கொண்ட நிலையில், படமும் அதே போல பாகங்களின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டிருக்குமா இல்லை.. இரண்டரை பாகங்கள் சேர்த்து, ஒவ்வொரு பாகமாக எடுக்கப்பட்டிருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. 

புத்தகத்தில் கதை எங்கு முடிகிறது?

நாவலின் முதல் பாகத்தில் இலங்கையில் போர்க்களத்தில் இருக்கும் அருள்மொழி வர்மருக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து விளக்கி, அவரைக் காக்க தன்னுடைய நண்பன் பார்த்திபேந்திரனை அனுப்ப முடிவெடுக்கிறான் இளவரசன் ஆதித்ய கரிகாலன். இதுசம்பந்தமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது தனக்கும் பழுவூர் இளையராணி நந்தினிக்கும் இடையிலான கடந்தகால உறவு பற்றியும் முதல்முறையாகத் தனது மனதைத் திறந்து காட்டுகிறான். அத்தோடு அந்தப்பாகம் முடியும்

இராண்டாம் பாகத்தில், இலங்கையில் இருந்து தன் தந்தை சுந்தர சோழரின் கட்டளைக்கு ஏற்ப, நாடு திரும்ப முடிவெடுக்கும் அருள்மொழி வர்மர், கப்பலில் செல்ல முடிவெடுக்கிறார். இதற்கிடையே அராபியர்கள் கொள்ளையடித்துச் சென்ற சோழ நாட்டுக் கப்பலில் அருள்மொழி வர்மர் இருப்பார் என்று நினைத்து, அந்தக் கப்பலை நோக்கி வந்தியத்தேவன் குதித்துச் செல்கிறான்.

அதில் இருக்கும் அராபியர்கள் மற்றும் மந்திரவாதி ரவிதாஸனிடம் மாட்டிக்கொள்கிறான்.வந்தியத்தேவனைக் காப்பாற்ற அந்தக் கப்பலுக்குச் செல்கிறார் அருள்மொழிவர்மர். கடலில் ஏற்படும் புயல் காரணமாக கப்பல் உடைந்து, இருவரும் நடுக்கடலில் மாட்டிக்கொள்கின்றனர். படகோட்டி மகளும் சமுத்திரகுமாரியுமான பூங்குழலி, இளவரசருக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என்ற எண்ணத்தில் கடலில் அருள்மொழிவர்மரைத் தேடிக்கொண்டு வருகிறாள். அத்தோடு அந்த பாகம் முடியும். படமும் இந்த வடிவில்தான் எடுக்கப்பட்டிருக்குமா என்பதை செப்டம்பர் 30 ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம். 

 இப்படிதான் முடிக்கப்படுகிறதா படத்திலும், அல்லது நாவலின் பாகங்களும், படத்தின் பாகங்களும் மாறுபடுகிறதா என்பதை இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்து தான், அறிய வேண்டியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்; மருமகள் செய்த கொடூர செயலால் மக்கள் அதிர்ச்சி
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்; மருமகள் செய்த கொடூர செயலால் மக்கள் அதிர்ச்சி
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
Embed widget