Box Office Collection : தீபாவளி ரேஸில் வென்றது யார்...அமரன், லக்கிபாஸ்கர் , பிரதர் , பிளடி பெக்கர் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
இந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான அமரன் , பிளடி பெக்கர் ,பிரதர் , லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் வசூல் நிலவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
இந்த தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் நான்கு படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் , கவின் நடித்த பிளடி பெக்கர் , ஜெயம் ரவி நடித்த பிரதர் , துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் ஆகிய நான்கு படங்கள் போட்டியிட்டன. இதில் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் தவிர மற்ற படங்களுக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்த நான்கு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலேக்ஷன் என்னவென்பதை பார்க்கலாம்
அமரன்
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் அவர் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் போட்டியே இல்லாமல் அமரன் திரைப்படம் வெற்றிபெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழி திரையுலகம் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த படத்தை பாராட்டியுள்ளார்கள். அமரன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ 155 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
லக்கி பாஸ்கர்
தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படங்களில் ஒன்று லக்கி பாஸ்கர். துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கியவர். மீனாக்ஷி செளதரி , ஐஷா கான் , ஹைபர் ஆதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்க் இசையமைத்துள்ளார் . லக்கி பாஸ்கர் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்டாக் மார்கெட் ஊழலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் இந்த தீபாவளி ரேஸில் அமரன் படத்திற்கு அடுத்தபடியாக பெரிய வெற்றிபெற்றுள்ளது. இதுவரை லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகளவில் ரூ 53 கோடி வசூல் செய்துள்ளது.
பிளடி பெக்கர்
அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கி கவின் நடித்துள்ள படம் பிளடி பெக்கர். நெல்சன் திலிப் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். ராதாரவி , ரெடி கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கவின் முன்னதாக நடித்த ஸ்டார் படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனால் பிளடி பெக்கர் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு கலவையான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. முழுக்க முழுக்க டார்க் காட்மெடி படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ஆனால் படத்தின் வசூல் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பிளடி பெக்கர் இதுவரை ரூ 6.28 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதர்
எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி , பிரியங்கா மோகன் , பூமிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் பிரதர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிளடி பெக்கர் படத்தைப் போலவே பிரதர் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துள்ளன. இதுவரை இப்படம் 8.37 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன