மேலும் அறிய

Amala Paul - Jagat Desai: ”திருமணமாக கைகூடிய காதல்” : அமலா பால் கணவர் ஜகத் தேசாய் யார் தெரியுமா?

ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அமலா பாலின் கணவரான ஜெகத் தேசாய் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர்.

Amala Paul's husband Jagat Desai: நடிகை அமலாபால் தனது காதலரான ஜகத் தேசாயை இன்று திருமணம் செய்து கொண்டார். 

கேரளாவை பூர்விகமாகக் கொண்டவரான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அமலா பால்,  தொடர்ந்து கோலிவுட்டில் வெற்றிநாயகியாக வலம் வரத் தொடங்கினார்.

நடிகர் விஜய்யுடன் தலைவா, நடிகர் விக்ரமுடன் தெய்வத் திருமகள், தனுஷூடன் வேலையில்லா பட்டதாரி என பல ஹிட் படங்களில் நடித்த அமலா பால், டோலிவுட் சினிமாவிலும் கால் பதித்தார். தெய்வத் திருமகள் திரைப்படத்தில் பணியாற்றும்போது  இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் அமலா பாலும் காதலித்தனர். சில மாதங்களிலேயே திருமணம் செய்து கொண்ட இருவரும்,  சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு அமலாபால் நடித்த ஆடை படம் சர்ச்சையானது. தொடர்ந்து திரைப்படங்கள் சுற்றுலா செல்வது, பார்ட்டிக்கு செல்வது என பிசியாக இருந்த அமலா பால் தனது பயணங்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.

View this post on Instagram
 
A post shared by Amala Paul (@amalapaul)

இந்த நிலையில் அமலா பால்,  ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அமலா பாலின் கணவரான ஜகத் தேசாய் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர். அமலா பால் நடிகையாக இருக்கும் நிலையில் ஜெகத் தேசாய் முற்றிலும் மாறுபட்டவர். சினிமா துறையை சேராத இவர், சுற்றுலா மற்றும் மருத்துவம் துறையை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல்,  கோவாவில் இருக்கும் லக்‌சி ஹோம்சே ப்ராபர்ட்டி நிறுவனத்தில் தலைமை விற்பனை அதிகாரியாக உள்ளார். அமலா பால் சுற்றுலா செல்லும் போது ஜகத் தேசாயை சந்தித்துள்ளார். அதன்பின்னர் நட்பாக பழகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. 

கோவாவில் செட்டிலாகி உள்ள ஜெகத் தேசாய், கடந்த வாரம் அமலாபாலுக்கு மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்தினார். ஒருவார இடைவெளியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: ஆளுங்கட்சியை சீண்டும் கமல்? பிக்பாஸ் மேடையில் அனல் பறந்த அரசியல் பேச்சு.. இன்றைய ஷோவில் பரபர!

OTT Release November 2023: நவம்பர் மாதத்தில் ஓடிடியை கலக்கப்போகும் சூப்பர்ஹிட் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
Modi Vs Trump Tariff: ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத ஆப்பு வைத்த மோடி; அலறித் துடிக்கும் அமெரிக்க பருப்பு வியாபாரிகள்; என்ன பிரச்னை.?
ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத ஆப்பு வைத்த மோடி; அலறித் துடிக்கும் அமெரிக்க பருப்பு வியாபாரிகள்; என்ன பிரச்னை.?
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
Modi Vs Trump Tariff: ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத ஆப்பு வைத்த மோடி; அலறித் துடிக்கும் அமெரிக்க பருப்பு வியாபாரிகள்; என்ன பிரச்னை.?
ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத ஆப்பு வைத்த மோடி; அலறித் துடிக்கும் அமெரிக்க பருப்பு வியாபாரிகள்; என்ன பிரச்னை.?
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
International Conference Center : செங்கல்பட்டில் ரூ.525 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.! 10ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம்- எப்போது திறப்பு.?
செங்கல்பட்டில் ரூ.525 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.! 10ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம்- எப்போது திறப்பு.?
அடி தூள்.! தொகுப்பூதியம் ரூ.1500-லிருந்து ரூ.7376 -ஆக உயர்வு.! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! தொகுப்பூதியம் ரூ.1500-லிருந்து ரூ.7376 -ஆக உயர்வு.! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு
Chennai Power Shutdown: சென்னைல செவ்வாய் கிழமை(20.01.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
சென்னைல செவ்வாய் கிழமை(20.01.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
Embed widget