OTT Release November 2023: நவம்பர் மாதத்தில் ஓடிடியை கலக்கப்போகும் சூப்பர்ஹிட் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..!
Upcoming OTT Tamil Movies November 2023: நவம்பர் மாதம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பல சூப்பர்ஹிட் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.
Upcoming OTT Releases November 2023: நவம்பர் மாதம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பல சூப்பர்ஹிட் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.
இந்தியாவில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி என்பது கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்துக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார், ஆஹா, சோனி லைவ், ஜீ5, சன் நெக்ஸ்ட் என பல நிறுவனங்களும் ஓடிடி தளத்தை முன்னெடுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக மாத சந்தா தொடங்கி ஆண்டு சந்தா வரை பல தளங்களில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுகிறது. ஒவ்வொரு படத்தின் அறிவிப்பும் வெளியாகும் போது இதனை எந்த ஓடிடி தளம் வாங்குகிறது என்பதே பலரின் ஆவலாக உள்ளது.
அதேசமயம் உள்ளூர் படங்கள் முதல் உலக படங்கள், வெப் சீரிஸ்கள் வரை ஓடிடி தளத்தில் கிடைப்பது என்பது சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. இப்படியான நிலையில் வாரா வாரம் ஓடிடி தளத்தில் படங்கள், வெப் சீரிஸ்கல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள படங்கள் பற்றி நாம் இதில் காணலாம்.
இறுகப்பற்று
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “இறுகப்பற்று” (Irugapatru). ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. திருமண உறவை மையப்படுத்திய இப்படம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இறுகப்பற்று படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகிறது.
ரத்தம்
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி வெளியான திரைப்படம் ரத்தம். இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கினார். ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் என பலரும் நடித்திருந்தனர். கண்ணன் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்தார். இப்படம் கடந்த நவம்பர் 3 ஆம்தேதி அமேசான் தளத்தில் வெளியாகிவிட்டது.
ஜவான்
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி, விஜய்சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘ஜவான்’. அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் ஷாரூக்கான் நடித்திருந்தார். இந்த படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது. ஜவான் படம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருந்தது.
தி ரோடு
அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா, சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘ தி ரோடு’. இந்த படம் 2000 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. தி ரோடு படம் நவம்பர் 10 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘லியோ’. அனிருத் இசையமைத்த இப்படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. வசூலில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம் நவம்பர் மாத இறுதியில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.