Amala Paul : பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏன் நடிக்கவில்லை? மனம் திறந்த அமலா பால்..
2 முறை வாய்ப்பு கிடைத்தும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை ஏன் நிராகரித்தேன் என்பது குறித்து நடிகை அமலாபால் விளக்கம் அளித்து உள்ளார்.
சிந்து சமவெளி திரைப்படம் மூலமாக சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'மைனா' படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் அமலாபால். அதன் பின்னர் தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தெய்வத்திருமகள்’ ‘ தலைவா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இதனிடையே ஏ.எல்.விஜய்க்கும், அமலா பாலுக்கு இடையே காதல் மலர்ந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். அதன் பின்னர் ‘ஆடை’ படத்தில் நிர்வாணமாக நடித்து கவனம் ஈர்த்த அமலாவின் ஹிந்தி வெப் சீரிஸான 'ரஞ்சிஷ் ஹை சாஹி' வெளியானது. தமிழில் ‘அதோ அந்த பறவைபோல’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அமலா. தற்போது கடாவர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் பாராட்டை பெற்றுவருகிறார் அமலா.
View this post on Instagram
இதைத் தொடர்ந்து ஒரு நேர்காணலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் ஏன் நடிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் அமலா பால். ”சில வருடங்களுக்கு முன் 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக மணிரத்னம் என்னை அழைத்தார். நான் அவர் ரசிகை என்பதால் உற்சாகமாக ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால், அப்போது அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதனால் வருத்தமும், கவலையும் அடைந்தேன்.
பின்னர் 2021-ம் ஆண்டு அதே படத்துக்காக அவர் என்னை அழைத்தபோது எனக்கு நடிக்கும் மனநிலை இல்லை. அதனால் மறுக்க வேண்டியதாகிவிட்டது. இதற்காக வருந்துகிறேனா? என்றால் இல்லை. ஏனென்றால் சில விஷயங்கள் நியாயமானவை. நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பற்றியது என்று நான் நினைக்கிறேன்”.
தெலுங்கு சினிமாவில் ஏன் அதிகம் நடிக்கவில்லை என்றும் கேட்டபொழுது. அங்கு சினிமா குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் ஆதிக்கம் இருந்தது. ஒவ்வொரு படத்திலும் 2 நாயகிகள் இருப்பார்கள். காதல் காட்சிகள், பாடல்கள் எல்லாமே கவர்ச்சியாகவே இருக்கும். கமர்ஷியல் படங்களாகவே இருந்தன. அதனால் அங்கு குறைவான படங்களிலேயே நடித்தேன். இவ்வாறு பதிலளித்தார் அமலா பால் .