மேலும் அறிய

Akshay kumar: தமிழ் சூப்பர் ஸ்டார் ஓவர்… அடுத்தது மலையாள சூப்பர் ஸ்டார் தான் - அக்ஷய் குமார் பேட்டி!

மலையாள படங்களில் நடிப்பதில் தனக்கு மிகவும் விருப்பம் என்றும்; அதில் என்ன சிக்கல் என்றால், தனக்கு மலையாளம் பேச தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரம் நடிகர் அக்ஷய்குமார்.‌ இவரது திரை தோற்றத்திற்கும்,  கதாபாத்திரங்கள் தேர்வு செய்யும் முறைக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் நிறைய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுகளையும் கொடுத்துள்ளார். பாலிவுட் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். தற்பொழுது ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய்குமார், பூமி பெட்னேகர், சாடியா கதீப், சஹேஜ்மீன் கவுர், தீபிகா கண்ணா மற்றும் ஸ்மிருதி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ரக்‌ஷா பந்தன். அண்ணன் - தங்கை பாசம் குறித்து எமோஷனல் நெகிழ்ச்சி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாகிறது. இதே தேதியில் ஆமிர் கானின் லால் சிங் சத்தா படமும் வெளியாகவுள்ளதால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் படத்தால் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தை புரொமோட் செய்ய அக்‌ஷய் குமார் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

மோகன்லாலுடன் நடிக்கத் தயார்!


Akshay kumar: தமிழ் சூப்பர் ஸ்டார் ஓவர்… அடுத்தது மலையாள சூப்பர் ஸ்டார் தான் - அக்ஷய் குமார் பேட்டி!

இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனின் போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அக்ஷய்குமார் பதில் அளித்துள்ளார். அந்த ரசிகர் கேட்கையில், நீங்கள் பல மலையாள படங்களின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துள்ளீர்கள். எப்பொழுது உங்களை மலையாள படங்களில் பார்க்கலாம்? என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த அக்ஷய் குமார், தனக்கு  மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கன்னட மற்றும் தமிழ் படங்களில் ஏற்கனவே நடித்துள்ள நிலையில், மலையாள படத்தின் வாய்ப்புக்காகவும் காத்திருப்பதாக கூறுகிறார். மலையாள படங்களில் நடிப்பதில் தனக்கு மிகவும் விருப்பம் என்றும் அதில் என்ன சிக்கல் என்றால், தனக்கு மலையாளம் பேச தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நான் என்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்ய விரும்புகிறேன்.  எனக்கு வேறு யாரும் குரல் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. நான் மலையாள படம் நடிக்க விருப்பப்படுகிறேன். நான் தமிழில் ரஜினிகாந்த் உடனும், கன்னட படத்திலும் நடித்து விட்டேன். தற்போது மோகன்லாலுடன் மலையாள படத்தில் நடிக்க விரும்பப்படுகிறேன். நான் இயக்குநர் பிரியதர்ஷன் இடம் மோகன்லால் படத்தில் வாய்ப்பு கேட்கப் போகிறேன். அவருக்கு விருப்பம் என்றால் நான் மோகன்லாலுடன் நடிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். மேலும், அப்படி ஒன்று நடந்தால் அது தனக்கு மிகவும் பெருமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் வில்லன்:


Akshay kumar: தமிழ் சூப்பர் ஸ்டார் ஓவர்… அடுத்தது மலையாள சூப்பர் ஸ்டார் தான் - அக்ஷய் குமார் பேட்டி!

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (எந்திரன் 2) 2.0 திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். கன்னடத்தில் முன்னணி நடிகர் விஷ்ணுவர்தனுடன் விஷ்ணு விஜயா என்ற ஆக்சன் திரைப்படத்தில் 1993 ஆம் ஆண்டு நடித்துள்ளார் அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது பெரும்பாலும் மக்களுக்கு தெரியாது. தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துவிட்ட நிலையில், தற்போது மலையாள படங்களில் நடிக்க விருப்பம் என்று கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Embed widget