Watch Video: அக்வா மேனாக மாறி தண்ணீருக்கு அடியில் ஒர்க் அவுட்... 56 வயதில் அசத்தும் அக்ஷய் குமார்.. வைரல் வீடியோ!
சரியான நேரத்துக்கு கண் விழிப்பது முதல் இரவு தூங்கச் செல்வது வரை, முறையான வாழ்க்கைமுறை, ஸ்ட்ரிக்ட்டான டயட், உடற்பயிற்சி என கடைபிடித்து வரும் அக்ஷய் குமாருக்கு இதற்காகவே ரசிகர்கள் பலர் உள்ளனர்.
பாலிவுட் தொடங்கி இந்திய அளவில் பிரபல நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் அக்ஷய் குமார். இந்தி சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிப் படங்களைக் கொடுத்து பிரபல நடிகராக விளங்கி வரும் அக்ஷய் குமார், ஒருபுறம் தன் பாஜக ஆதரவுக் கருத்துகளால் விமர்சனங்களை எதிர்கொண்டும் வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹிட்
சென்ற ஆண்டு தொடங்கி தொடர் தோல்விப் படங்களைப் பெற்ற அக்ஷய் குமாருக்கு சமீபத்தில் ஓஎம்ஜி 2 படம் திருப்புமுனையாக அமைந்து வெற்றியைக் கொடுத்தது. இதனை அடுத்து, மீண்டும் சுறுசுறுப்பாக அக்ஷய் குமார் மீண்டும் தன் பழைய ஃபார்முக்குத் திரும்பி, ரவுண்டுகட்டி டஜன் கணக்கிலான படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அக்ஷய் குமாரின் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்களை வாயைப் பிளக்கவைத்து லைக்ஸ் அள்ளி வருகிறது.
ஃபிட்னெஸ்ஸில் ஆர்வம்
பொதுவாகவே ஃபிட்னெஸ் ஃப்ரீக்காக வலம் வரும் அக்ஷய்குமாரை அவரது கட்டுடலுக்காகவே ரசிகர்களுக்கு பிடிக்கும். காலையில் சரியான நேரத்துக்கு கண் விழிப்பது முதல் இரவு தூங்கச் செல்வது வரை முறையான வாழ்க்கைமுறை, ஸ்ட்ரிக்ட்டான டயட், உடற்பயிற்சி முறை என கோடு போட்டு வாழ்ந்து வரும் அக்ஷய் குமாருக்கு இதற்காகவே ரசிகர்கள் பலர் உள்ளனர்.
இந்நிலையில் தண்ணீருக்குள், நீச்சல் குளத்தில் படுத்தபடியும், உள்ளே தொங்கியபடியும் அக்ஷய் குமார் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
தன் 56 வயதில் அக்ஷய் குமார் இப்படி கட்டுக்கோப்பாக உடலைப் பேணி வரும் நிலையில், நீச்சல் குளத்தில் அவர் படுத்தபடி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அடுத்த படம் என்ன?
முன்னதாக அக்ஷய் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து ரிலீசாக உள்ள ‘வெல்கம் டு த ஜங்கள்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. பாலிவுட்டின் புகழ்பெற்ற பல நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ள இந்த வீடியோ ரசிகர்களை உற்சாகப்படுத்தி லைக்ஸ் அள்ளியது.
தொடர் ஹிட் படங்களை வல்லவரான நடிகர் அக்ஷய் குமார் கோலிவுட் நடிகர்களுக்கு ஷங்கரின் 2.0 படம் மூலம் ரஜினிகாந்துக்கு வில்லனாக அறிமுகமானார். இந்நிலையில் அக்ஷய் குமாரின் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியாகி சமீப காலங்களில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
காட்டுக்குள் செல்லும் ராணுவப் படை மற்றும் அவர்களுக்கு இடையில் நடக்கும் சுவாரஸ்யமான நகைச்சுவையான பயணம் ஆகியவற்றை சொல்லும் வகையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் அமைந்து ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெல்கம் டூ த ஜங்கிள் படம் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.