AK 61 update: 21 நாட்கள் பாங்காக்கில் ஷூட்டிங்...ரிலீஸ்க்கு தயாராகும் AK 61!
நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே 61 திரைப்படத்தின் ஷூட்டிங் பாங்காக்கில் இந்த மாதம் செப்டம்பர் மாதம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அஜித்குமார் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் அனைவருக்கும் கொண்டாட்டம் தான். ரசிகர்கள் படத்தை வரவேற்கும் விதமே திருவிழா போன்று இருக்கும். இயக்குநர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஏகே 61. பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படம், இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Get ready fans 🔥🔥#AjithKumar
— HVinoth (@HVinothDirector) August 13, 2022
#AK61 @BoneyKapoor @ZeeStudios_ @GhibranOfficial
இந்த படத்திற்கான ஷூட்டிங் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வங்கி கொள்ளை மையமான கதைக்களத்தில் அஜித்தின் நடிப்பு, எனவே படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் உள்ளது. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இந்த செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
21 நாட்கள் பாங்காக்கில் சூட்டிங்:
இயக்குனர் ஹச்.வினோத்தும் படக்குழுவினரும் வரும் செப்டம்பர் முதல் வாரம் ஷூட்டிங் காக பாங்காக் செல்ல உள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் படமான இந்த திரைப்படத்தின் சூட்டிங் 21 நாட்கள் பாங்காக்கில் நடக்கவிருக்கிறது. செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அளவில் அஜித் குமாரின் முக்கிய சண்டை காட்சிகள் பாங்காங்கில் எடுக்கப் போவதாக தரவுகள் கூறுகின்றன.
#AK61 Diwali release. Official announcement soon.🔥🔥
— HVinoth (@HVinothDirector) June 21, 2022
அக்டோபர் மாதத்திற்குள் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெறும் எனவும், அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவில்லை. படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Get ready🔥🔥🔥#AK61 pic.twitter.com/lOGZNQIyrD
— HVinoth (@HVinothDirector) June 4, 2022
அதே காம்போ தான்!
இந்த ஆக்சன் திரில்லர் திரைப்படம் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் வெளியாக உள்ளது. அஜித் குமார் ஹச்.வினோத் மற்றும் போனி கபூரின் காம்போ ஒன்றும் புதிதல்ல! வலிமையில் இணைந்த அதே காம்போ தான்… வலிமை திரைப்படத்தின் அப்டேட்டிற்காக நாம் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போன கதை எல்லாம் நினைவுக்கு வருகிறது அல்லவா?
ஆனால் இந்த படம் அப்படி இருக்காது என்று எதிர்பார்க்கலாம். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மற்றும் ஹைதராபாத்தில் மாபெரும் வங்கி செட்டப் அமைக்கப்பட்டு படத்தின் முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. படக்குழுவினர் அனைவரும் இந்த படம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும், படத்தை ரிலீஸ் செய்வதற்கு மிகவும் ஆவலாகவும் இருக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் அஜித்குமார் தனது அடுத்த படமான இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.