மேலும் அறிய

Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் 2025ம் ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்கள் வெளியானது. இந்த நிலையில் அவர் அடுத்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை.

நடிகர் அஜித்குமார் தொடர்பான கார் ரேஸிங் ஆவணப்படம் 2026ம் ஆண்டு வெளியாகும் தேதி எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் ஒரு பக்கம் திரைப்படம், இன்னொரு பக்கம் கார் ரேஸிங் என பிஸியான ஷெட்யூலில் வலம் வருகிறார். அவருக்கு 2025ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது என சொல்லலாம். இந்தாண்டு குடியரசு தினத்தில் அவர் மத்திய அரசால் கலைத்துறையில் சிறப்பான சேவை புரிந்ததற்காக அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருதை வென்றார். அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு அஜித் நடிப்பில் இரண்டு படங்களும் வெளியானது.

இதில் பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிய அளவில் இல்லாமல் போனது. இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம்  தேதி ரிலீசானது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனைப் படைத்தது. அதுமட்டுமல்லாமல் அஜித் ரசிகர்களையும் திருப்திபடுத்தியது என சொல்லலாம். இதனைத் தொடர்ந்து அடுத்தப்படம் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கார் ரேஸ் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார். 

கார் ரேஸிங்கில் கலக்கும் அஜித்

 நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங்கில் களமிறங்கி கலக்கி வருகிறார். அவர் தலைமையிலான அணி சில போட்டிகளில் வெற்றி பெற்றது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அஜித் உலகளவில் இந்தியாவை பெருமைப்படுத்துவதாக கொண்டாடினர். இந்த நிலையில் அவரின் கார் ரேஸிங் தொடர்பான ஆவணப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

கார் பந்தயத்தில் அஜித் சந்தித்த சவால்கள், காயங்கள், வலிகள் என அனைத்தையும் பேசியிருக்கும் இந்த ஆவணப்படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்தது. 15 ஆண்டுகளுக்குப் பின் அவர் மீண்டும் முழு வீச்சில் கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். இதற்காக அஜித் குமார் ரேஸிங் என்ற குழுவை தொடங்கினார். அஜித் ரேஸிங் தொடர்பான ஆவணப்படத்தை இயக்குநர்கள் ஏ.எல்.விஜய் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் ரேஸ் டிராக்கில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருந்தது.

சினிமாவில் அஜித் தனது அடுத்தப் படத்திற்கான ஷூட்டிங் இன்னும் செல்லவில்லை. இப்படியான நிலையில் 2026ம் ஆண்டு ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் கார் ரேஸ் தொடர்பான ஆவணப்படம் மே 1ம் தேதி அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்முறையாக ஒரு ஆவணப்படம் தியேட்டரில் வெளியாகவுள்ளது எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி
எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி
தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று CM விஜய் அதிரடிஉத்தரவு - 92,000 பேர்
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று CM விஜய் அதிரடிஉத்தரவு - 92,000 பேர்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CHN-BLR Highway: 10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
10KM-க்கு 90 நிமிடங்களா..! தவிக்கும் வாகன ஓட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரத்திற்கு தீர்வு எப்போது?
TN Weather News: அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Hyundai Creta: லேப்டாப் சைஸில் ஸ்க்ரீன்..! புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் - கொரியாவின் புது மிட்-சைஸ் SUV
லேப்டாப் சைஸில் ஸ்க்ரீன்..! புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் - கொரியாவின் புது மிட்-சைஸ் SUV
கந்த சஷ்டி விரதம் இன்று முடிக்கிறீர்களா? விரதத்தை நிறைவு செய்யும் சரியான முறை இதுதான்!
கந்த சஷ்டி விரதம் இன்று முடிக்கிறீர்களா? விரதத்தை நிறைவு செய்யும் சரியான முறை இதுதான்!
ICC Worldcup: மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
Weekly Rasipalan: மேஷம் முதல் கடகம் வரை.. எந்த கிழமையில் என்ன வழிபாடு செய்தால் பணவரவு அதிகரிக்கும்?
Weekly Rasipalan: மேஷம் முதல் கடகம் வரை.. எந்த கிழமையில் என்ன வழிபாடு செய்தால் பணவரவு அதிகரிக்கும்?
Embed widget