தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.
2010-ஆம் ஆண்டு FAI ஃபார்முலா 2 போட்டியில் பங்கேற்றார்.
அதன்பின் 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கார் ரேஸில் ஈடுபட்டார்.
துபாயில் நடக்கும் 24 மணி கார் ரேஸில் அஜித் குமார் கலந்துகொள்வதாக இருந்தார்.
24 மணி நேரம் நடைபெறும் இந்த ரேஸில் கேப்டன் அஜித் 14 மணி நேரம் காரை ஓட்ட வேண்டும்.
இந்த 24 மணி நேரத்தில் எவ்வளவு Lap-ஐ கடக்கிறார்களோ அதை வைத்தே புள்ளிகள் வழங்கப்படும்.
இந்நிலையில், இந்த ரேஸிற்கான பயிர்சியில் அஜித்திற்கு விபத்து ஏற்பட்டது.
அதனால் அணி வெற்றி கருதி அஜித் பந்தயத்திலிருந்து விலகுவதாக அவரின் அணி அறிவித்துள்ளது.